Sunday, June 19, 2011

கொலை, பாலியல் வன்புணர்வையும் மகாவம்சத்தில் இணைக்க !


பண்டைய பௌத்த கலாசாரங்களுடன் கொலை மற்றும் பாலியல் வன்புணர்வுகளையும் மகாவம்சத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என, சிறீலங்காவின் முன்னாள் படைத் தளபதியும், போர்க்குற்ற நபருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வெள்ளைக்கொடி வழக்கு தொடர்பான விசாரணை கடந்த வியாழக்கிழமை (16-06௨011) கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்ற பின்னர் ஊடகவியலாளர்களுக்கு சரத் பொன்சேகா கருத்துரைத்தார். பௌத்தர்களின் பொசன் பூரணை தின நிகழ்வில் பங்கேற்றிருந்த பௌத்த பிக்கு ஒருவர், சிறீலங்காவில் உன்னதமான கலாசாரம் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து கருத்துரைத்தபோதே சரத் பொன்சேகா, பாலியல் வன்புணர்வும் மகாவம்சத்தில் சேர்க்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டார். சிறீலங்கா படையினர் மேற்கொண்ட பாலியல் வல்லுறவுகள் பற்றி காணொளிப் பதிவை பிரித்தானியாவின் சனல்௪ தொலைக்காட்சி வெளியிட்டு இரண்டு நாட்களில் பொன்கேசா இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment