Lebal

Thursday, September 29, 2011

ஜநாவின் நடவடிக்கை குறித்து மீளாய்வு இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்!!

சிறிலங்காவில் நடந்து முடிந்த போரின் போது ஐ.நாவின் மனிதாபிமான மற்றும் பாதுகாப்புத் தொடர்பான கடப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் தொடர்பாக மீளாய்வு செய்ய ஐ.நா பொதுச்செயலர் உத்தரவிட்டுள்ளது சிறிலங்காவுக்கு மேலும் பல பிரச்சினைகளை உருவாக்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


இந்த மீளாய்வை மேற்கொள்ள சவூதி அரேபிய நாட்டவரான ஐ.நாவின் முன்னாள் சனத்தொகை நிதியப் பணிப்பாளர் தொராயா ஒபெய்ட்டை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்துள்ளார்.

இவர், அடுத்த மாதம் ஆரம்பித்து நான்கு மாதங்களுக்குள் தனது பணியை நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா அதிகாரிகள், அதன் களப் பணியாளர்கள் மற்றும் சிறிலங்காவில் உள்ள நிபுணர்களின் கருத்துகளையும் இவர் பெற்றுக் கொள்ளவுள்ளார்.

போரின் போது பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நாவும் அதன் அமைப்புகளும் தவறி விட்டதாக ஐ.நா நிபுணர் குழு தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

அத்துடன் போரின் போதான ஐ.நாவின் செயற்பாடுகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் ஐ.நா நிபுணர் குழு பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையிலேயே பான் கீ மூன் தொராயா ஒபெய்ட்டை ஐ.நாவின் செயற்பாடுகளை மீளாய்வுக்காக நியமித்துள்ளதாகவும், இது சிறிலங்காவுக்கு மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்றும் இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment