Thursday, September 22, 2011

இலங்கைத் தமிழரை காப்பாற்றிய இந்திய நீதித் துறை!


இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படுகின்றமையில் இருந்து தப்பி உள்ளார் தமிழர் ஒருவர்.

இந்திய நாட்டு நீதித் துறை தலையிட்டு இவரை காப்பாற்றி உள்ளது.

இவரின் பெயர் சந்திரகுமார். அகதியாக 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு வந்து இருந்தார். இவர் சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முயன்றபோது போலி ஆவணங்களுடன் கைது செய்யப்பட்டார்.


இவர் மீதான வழக்கு நடவடிக்கையின்போது இவரை நாடு கடத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது.

ஆனால் இக்கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

அகதியாக வந்திருந்த இவர் நாடு கடத்தப்படுகின்ற பட்சத்தில் இலங்கையில் துன்புறுத்தப்படலாம் என்று காரணமும் சொல்லி உள்ளது.

No comments:

Post a Comment