Lebal

Wednesday, September 07, 2011

வியட்நாம் -இலங்கையும் பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது !


வியட்நாம் அரசும் இலங்கை அரசும் பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. நேற்று முந்தினம் வியட்நாம் சென்ற பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ வியட்நாம் பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்துள்ளார். இச் சந்திப்பின் போதே இருவரும் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். பாதுகாப்புத் தகவல்களைப் பரிமாறுவது, இரு நாட்டு இராணுவமும் கூட்டாகப் பயிற்சியில் ஈடுபடுவது மற்றும் கண்ணிவெடிகளை அகற்ற சேர்ந்து பணி புரிவது என்று பல அம்சங்கள் அடங்கிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக கொழும்புத் தவகல்கள் தெரிவிக்கின்றன.


இதனைத் தொடர்ந்து வியட்நாம் பிரதமரையும் கோத்தபாய சந்தித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான கப்பல் போக்குவரத்து மற்றும் கடல் நடமாட்டம் குறித்த தகவல்களைப் பரிமாறிக்கொள்ளுதல் போன்ற உடன்படிக்கைகளும் எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதும் இதுகுறித்து மேலதிக தகவல்கள் எதனையும் கொழும்பு வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகள் முன்னதாக எந்த நாடுகளில் அதிகம் தங்கியிருந்தார்களோ அந்த அந்த நாடுகளுடன் இலங்கை மெல்ல மெல்ல பல பாதுகாப்பு ஒப்பந்தங்களைப் போட்டு வருவதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

இதன் அடிப்படையில் கைதிகள் பரிமாற்றம் குறித்தும் இரகசியமாக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு வருகின்றனவா என்ற சந்தேகங்களும் வலுத்துள்ளது.

No comments:

Post a Comment