Lebal

Tuesday, September 06, 2011

சென்னை உயர்நீதிமன்றத்தில் தினமலர் நாளிதழை எரித்த வழக்கறிஞர்கள்.

மூவர் உயிரைக் காப்பதற்காக தீக்குளித்த, தோழர்.செங்கொடியின் தியாகத்தை கொச்சைப் படுத்தியும், தமிழினத்தையும், தமிழினத் தலைவர்களைப் பழித்தும் கட்டுரை வெளியிட்ட தினமலர் நாளேட்டை கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  "தமிழகத்தை விட்டு தினமலரைத் துரத்துவோம்.  தமிழினத் துரோகியே வெளியேறு" என்று முழக்கங்கள் எழுப்பப் பட்டன.  ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

மூவர் உயிரைக் காக்க வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்துக் கொண்டு தீக்குளித்து இறந்தார் தோழர் செங்கொடி.  அந்த செங்கொடி காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார் என்று இன்று தினமலர் நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது.  இதைக் கண்டித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தினமலர் நாளிதழை எரித்து, செருப்பால் அடிக்கும் போராட்டம் நடைபெற இருக்கிறது.

No comments:

Post a Comment