இலங்கை பாராளுமன்றத்தில்
இன்று நவராத்திரி விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்த் தேசிய
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியும் ஈழ
மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்
பாராளுமன்றக் குழுக்களின் உப தலைவருமாகிய சந்திரகுமாரையும் தவிர வேறெந்த
தமிழ் அமைச்சர்களோ பாராளுமன்ற உறுப்பினர்களோ கலந்துகொள்ளவில்லை.இன்று வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் பூஜைகள் ஆரம்பமாயின.
இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் சிங்கள, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
எனினும் அரசாங்க தரப்பின் சார்பாக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய தமிழ் அமைச்சர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ எவரும் கலந்துகொள்ளாமை குறித்து விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு வருகை தந்திருந்த உயர் அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment