Lebal

Sunday, October 02, 2011


யாழ்ப்பாணத்தில் கிறீஸ் மனிதர்கள் என்ற பின்னணியில் உல்லாசப் பயணிகளாக இலங்கை வந்து யாழ். குடாவுக்கு விஜயம் செய்யும் இந்தியப் பிரஜைகளின் ஒரு குழுவினரே காரணம் என யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த கதுருசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள மோசமான நிலைக்கும் சட்ட விரோத செயற்பாடுகளுக்கும் இவர்கள் தான் முக்கிய காரணமாக இருப்பதாகவும் தங்களின் விசாரணைகள் மூலம் தெரியவந்திருப்பதாக அவர் குறிப்பிட்டள்ளார்.


விசா முடிந்து யாழ்ப்பாணத்தில் தங்கி சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட சுமார் 17 பேரைக் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள்  கைது செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். குடாவில் ஏற்பட்டுள்ள கிறீஸ் பூத விவகாரத்தின் பின்னணியில் இவர்களது தொடர்பும் இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டுள்ள அவர், இவர்களுக்கும் புலம் பெயர் தமிழர்களுக்கும் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து ஆராய வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதே வேளை நாளை ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்.சிவில் அலுவலகத்தில் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க யாழ்.பிராந்திய ஊடகவியலாளர்களைச் சந்தித்து யாழில் கிறீஸ் மனிதர்களின் பின்னணி தொடர்பாக விளக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment