Lebal

Thursday, December 08, 2011

யுத்தத்திற்குப் பின் வடக்கில் 707 சிறுவர்கள் மாயம்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் 707 சிறுவர்கள் காணாமற்போயுள்ளதாக யுனிசெவ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவர்களில் 374 ஆண் சிறுவர்களும், 333 பெண் சிறார்களும், அடங்குகின்றனர் எனவும், காணமற் போனவர்களில் 116 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டவர்களில் 31 சிறுவர்கள் அவர்களது குடும்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன்,  22 சிறுவர்களை குடும்பத்தினருடன் இணைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் யுனிசெவ் கூறியுள்ளது.

மேலும், 63 சிறுவர்களுடைய பெயர் விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இந்தச் சிறுவர்களை அடையாளப்படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் யுனிசேவ் அமைப்புத் தெரிவித்துள்ளது.

2011 யூலை மாதம் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 16 – 18 வயதிற்குட்பட்ட 676 சிறுவர்கள் காணமற்போயுள்ளனர்.

இதேவேளை காணமற்போன சிறுவர்களின் மொத்த எண்ணிக்கையில் 30 சதவீதமானவர்கள் யுத்தம் முடிவுற்ற பின்னர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இறுதியாகக் காணப்பட்டதாகவும், 60 வீதமான சிறுவர்கள் விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு மூலம் காணமற் போயுள்ளதாகவும், பதிவாகியுள்ளதாக யுனிசெவ் சுட்டிக்காட்டியுள்ளது.

மேற் கூறப்பட்டுள்ள தரவுகள் அனைத்தும் யுனிசேவ் அமைப்பினால் சேகரிக்கப்பட்டு வடபகுதி மீள் இணைவாக்க அலகிடம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment