பிரித்தானியாவில் இருந்து 6
வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனிக்கு தப்பிச்சென்ற இலங்கை தமிழ் குடும்பம்
ஒன்று மீண்டும் பிரித்தானியாவுக்கு திரும்பவேண்டும் என்று பிரித்தானிய
மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த இலங்கைக் குடும்பம் முன்னர் வடக்கு லண்டனில் வசித்து வந்தநிலையில், அந்த குடும்பத்தினர் சட்டரீதியற்ற வகையில் தடுத்து வைக்கப்பட்டமையை அடுத்து ஜெர்மனிக்கு தப்பிச்சென்றனர்.
இது தொடர்பாக வழக்கு பிரித்தானிய மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது. இதன்போது குறித்த குடும்பத்துக்கு பிரித்தானிய உள்நாட்டு செயலாளர் 37ஆயிரம் பவுண்ஸை நட்டஈடாக வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தொகை எதிர்வரும் 28 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது. நீதிபதி Justice Cranston இன் தீர்ப்பின்படி குறித்த இலங்கை குடும்பத்தின் தலைவரான கணவரின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மனரீதியாக பாதிக்கப்பட்ட அவரின் மனைவி 14 மற்றும் 23 வயதுகளை கொண்ட பிள்ளைகள் ஆகியோர் பிரித்தானியாவுக்கு திரும்ப உரித்துடையவர்களாவர்.
இந்தக் குடும்பத்தினர் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் பிhரித்தானிய குடிவரவு மற்றும் காவல்துறை அதிகாரிகளினால் முற்றுகையிடப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment