Lebal

Monday, December 26, 2011

தேசத்தின் குரல்,சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோரின் வணக்க நிகழ்வுகள் சுவிசில்இடம்பெற்றுள்ளது!

தேசத்தின் குரல் அன்ரன்பாலசிங்கம், பிறிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு
மாவீரர்களின் வணக்க நிகழ்வு சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்னில் உணர்வெழுச்சியுடன்
நடைபெற்றது.
கடந்த 18.12.2011 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 15.30 மணி தொடங்கிய வணக்க நிகழ்வில்
தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து தேசத்தின்குரல்
அன்ரன்பாலசிங்கம், பிறிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு

மலர்மாலை அணியப்பட்டு சுடரேற்றி வைக்கப்பட்டது. இதனையடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டு
மலர்வணக்கம், தீபாஞ்சலி ஆகியவையும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
தேசத்தின்குரல் அன்ரன்பாலசிங்கம், பிறிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோரின்
தமிழீழவிடுதலைப் போராட்டகாலபணிகள் பற்றிய காணொளிக்காட்சிப்படுத்தப்பட்டது தொடர்ந்து
கவிதாஞ்சலி, எழுச்சி நடனம், எழுச்சிப் பாடல்கள், சு.ப.தமிழச்செல்வன் பற்றிய
வரலாற்றை நினைவுபடுத்தும் உரை, கருத்துரை என்பனவும்; சிறப்பாக இடம்பெற்றன.





No comments:

Post a Comment