Lebal

Friday, December 30, 2011

இலங்கை தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது


பிரான்ஸில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படத்தைக் கொண்ட தபால் முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளமைக்கு இலங்கை தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர்கள் பிரான்ஸில் நான்கு தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளனர்.

ஈழ வரைபடம், விடுதலைப்புலிகளின் மலர், புலிக் கொடி மற்றும் பிரபாகரனின் உருவப்படத்தைக் கொண்ட நான்கு வகையான முத்திரைகள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விசேட தபால் முத்திரைகளுக்கு பிரான்ஸ் தபால் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், நேற்று முன்தினம் முதல் இந்த முத்திரைகள் பயன்பாட்டுக்கு விடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் முத்திரை வெளியீடு தொடர்பில் பிரான்ஸ் வாழ் சிங்களவர்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment