Lebal

Monday, December 05, 2011

யேர்மன் சமூகத்தில் ஈழத்தமிழர்களின் இணைவாக் விளையாட்டுப்போட்டிகள்.

பெர்லின் நகரத்தில் யேர்மனிய விளையாட்டுக் கழகத்தால் சிறுவர்களுக்கான உள்ளரங்க உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ஈழத்தமிழர்களும் பங்குபற்றி தமது இனத்தை அடையாளப்படுத்தி யேர்மனிய மக்களுடன் இணைந்து நிற்கின்றார்கள்.

பல்வேறு நாடுகளில் அதன் மக்கள் தம் நாட்டில் வாழும் வெளிநாட்டவர்கள் தம் சமுதாயத்தில் இணைவாக்கம் கொள்ள வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார்கள் .அதற்கு முன்மாதிரியாக புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும் தமது பாரம்பரிய கலாச்சாரத்தை பேணும் வகையிலும் சிறப்பாக ஈழத்தமிழர்கள் அத்தோடு அவர் தம் வழித்தோன்றலான அடுத்த சமுதாயம் தாம் வாழும் நாடுகளின் மக்களுடன் முழுமையான  இணைவாக்கம் கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள்.

அதற்கு முன்னுதாரணமாக  3 .12 .2011 சனிக்கிழமை அன்று பெர்லின் நகரத்தில் யேர்மனிய விளையாட்டுக் கழகத்தால் சிறுவர்களுக்கான உள்ளரங்க உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ஈழத்தமிழர்களும் பங்குபற்றி தமது இனத்தை அடையாளப்படுத்தி யேர்மனிய மக்களுடன் இணைந்து நின்றனர் .இவ்வகையான சந்தர்ப்பங்களால் நாம் எமது இன அடையாளங்களை பல்வேறு சமூகத்தில் எடுத்துச்செல்ல முடியும் என்பதும் அத்தோடு பல்லின சமூகத்தின்  நன்மதிப்பையும் அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment