Lebal

Friday, January 06, 2012

தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களைக் கொண்ட முத்திரைகள் கனடாவிலும் வெளியீடு!!

பிரான்ஸில் புலிகள் சார்பான முத்திரைகள் வெளிவந்தததையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களைக் கொண்ட முத்திரைகள் கனடாவில் புழக்கத்திலுள்ளதை ஓட்டாவிலுள்ள இலங்கையர் நிறுவனமொன்று கனேடிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழீழமென காட்டப்பட்ட பகுதியின் படத்தைக் கொண்ட தனிப்பட்ட முத்திரைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் முகப்பு நிறுவனமான தமிழ் இளைஞர் நிறுவனம் கனடா தபால் சேவையை துஷ்பிரயோகம் செய்து வெளியிட்டுள்ளதாக இலங்கையர் அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.

'நான் தமிழ் இன அழிப்பை நினைவில் வைத்துள்ளேன்' என்னும் வாசகம் முத்திரையில் பொறிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
இந்த முறைகேடான முத்திரையை புழக்கத்திலிருந்து அகற்றவும் இதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அறிய நாம் ஆவலாகவுள்ளோமென முறைப்பாட்டு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment