Lebal

Saturday, January 21, 2012

கருணாவின் ஆதரவாளரால் மஹிந்தருக்கு ஆபத்து?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு தீங்கு ஏற்படுத்த முயன்றார் என்கிற சந்தேகத்தில் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

திருகோணமலையில் உப்புவெளியைச் சேர்ந்தவர் இவர். மிகிந்தலையில் ஹோட்டல் ஒன்றில் கடந்த 06 மாதமாக வேலை செய்து வந்திருக்கின்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று மிகிந்தலைக்கு சென்று இருந்தார்.

இந்நிலையில் மஹிந்தருக்கு மிகிந்தலையில் வைத்து இவர் தீங்கு செய்ய உள்ளார் என்று பொலிஸாருக்கு அவசர தொலைபேசி அழைப்பு மூலம் இரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.

இந்நிலையில் மிகிந்தலைப் பொலிஸார் இவரை உடனடியாக கைது செய்தனர்.

கைது மேற்கொள்ளப்பட்டபோது ஆளடையாளத்தை நிரூபிக்கக் கூடிய ஆவணம் எதுவும் இவரிடம் இருந்து இருக்கவில்லை.

இவர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டு மேலதிக நீதிவானின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இவருக்கு வேண்டாதவர் யாரோ பொலிஸாருக்கு அழைப்பு விடுத்து பொய் சொல்லி இருக்கின்றனர் என்று இவரின் சார்பில் ஆஜராகி இருந்த சட்ட்த்தரணி வாதாடினார்.

No comments:

Post a Comment