இந்திய
போபால் மவுலானா அசாத் தொழிநுட்ப கல்வியகத்தில் கல்வி கற்றுவந்த இலங்கை
மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக
இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த இளைஞன் தான் தங்கியிருந்த விடுதி அறையில் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் வருட பொறியியல் பீடத்தில் கல்வி கற்று வந்த 20 வயதுடைய இலங்கை இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
"அவருடைய சடலம் அறைக்கு உள்ளே தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது. அறை உள்ளே மூடப்பட்டிருந்தது. எனினும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான ஆவணம் எதனையும் நாம் கைப்பற்றவில்லை." என கமலா நகர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எஸ்.பதோரியா குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment