Lebal

Sunday, January 15, 2012

சந்திக்கிறோம்: ஆனால், நிகழ்ச்சி நிரலில் நேரம் ஒதுக்கப்படவில்லை

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நாளை பேச்சு நடக்கும்; அதனை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது என்று தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
நாளை இலங்கை வரும் கிருஷ்ணாவின் நிகழ்ச்சி நிரலில் கூட்டமைப்புடனான சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. இது குறித்துக் கேட்டபோது, “எம்முடனான சந்திப்பை இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது” என்றார் சுரேஷ். கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் அல்லது வெளி இடம் ஒன்றில் இந்தச் சந்திப்பு நடைபெறலாம் என்று தெரிவித்த அவர், நிகழ்ச்சி நிரலில் இந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்படாததற்கான காரணம் தனக்குத் தெரியாது என்றார்.

கிருஷ்ணாவுடனான சந்திப்பில், “இந்தியாவில் மாநிலங்களுக்கு எவ்வாறு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளனவோ அவ்வாறே இலங்கையிலும் தீர்வு முன்வைக்கப்படவேண்டும் என்று கூட்டமைப்பு வலியுறுத்தும்” என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment