Lebal

Friday, January 06, 2012

சீனாவுடனான இலங்கையின் தொடர்புகளுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது!! - கிருஸ்ணா

பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கை தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


இலங்கையையும் இந்தியாவையும் பாதிக்கும் பல முக்கிய பாதுகாப்பு காரணிகள் காணப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலத்திலும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது.

இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றுவதற்கும் முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் இந்தியா தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருகின்றது. உறவுகளை மேலும் மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் நான் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளேன்.

சீனாவுடன் இலங்கை பேணி வரும் தொடர்புகள் குறித்து அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது. ஏனைய உலக நாடுகளுடன் இலங்கை பேணி வரும் உறவுகளுக்கு மதிப்பளிக்கின்றோம். நன் மதிப்பின் அடிப்படையில் உறவுகளைத் தொடர்வதற்கே இந்தியா விரும்புகின்றது.

No comments:

Post a Comment