இந்திய சிறீலங்காவின் கூட்டுச்சதியால் வீரவரலாறான கேணல் கிட்டு உள்16.01.1993 அன்று வங்கக்கடலில் இந்திய சிறீலங்கா கடற்படையினரின் கூட்டுசதியினால் வீரவரலாறான கேணல்கிட்டு,லெப்ரினன்கேணல் குட்டிசிறி,மேஜர் வேலன் அல்லது மலரவன்,கடற்புலி கப்டன் ஜீவா,கடற்புலி கப்டன் குணசீலன்அல்லது குணராஜ், கடற்புலி கப்டன் நாயகன்,கடற்புலி கப்டன் றொசான், கடற்புலி லெப்ரினன் அமுதன், கடற்புலி லெப்ரினன் நல்லவன்,கடற்புலி லெப்ரினன் தூயவன் ஆகிய மாவீரர்கள் வீரவரலாறானாhகள் இந்த மாவீரர்களின் 19 ஆம் ஆண்டு நினைவில் வீரவணக்கத்தினை
தெரிவித்துக்கொள்கின்றோம்.கேணல் கிட்டு அண்ணாஅவர்களின் போராட்ட வரலாறு.
1979ல் ஆரம்ப காலப்பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிடப்பட்ட காலம் சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் பதினெட்டு வயது நிறைந்த இளைஞன் தன்னை விடுதலைப் போராளியாக மாற்றியதன் மூலம் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். கிட்டுஅண்ணாவும் இன்னும் சில தோழர்களும் தலைவரிடமே போரியலை நேரில் கற்றார்கள். கிட்டுவின் துடிப்பும் வேகமும் அங்கிருந்தவர்களிடையே அவரை வேறுபடுத்திக் காட்டியது.
எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற வேகமும் எந்த விடயத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் கிட்டு அண்ணாவிற்கு இயல்பாகவே இருந்ததால் தலைவரின் எண்ணங்களை சிந்தனைகளை மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லை கடந்த பாசத்தை தலைவரின் அருகில் இருந்த கிட்டுஅண்ணா அறிந்துகொள்கிறார். அளவு கடந்த திறமையுடன் வேகமும் விவேகமும் நிறைந்த அவரது செயற்பாடுகள் அவர் மீதான தனி நம்பிக்கை வளரக் காரணமாகின்றன. தன் மீது தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் காலம் கனிந்துவரும் வரை கிட்டு அவர்கள் காத்திருக்கிறார். விடுதலைப்போராட்டத்தில் தொடக்க காலத்தில் சிறு சிறு தாக்குதல்களில் பங்குகொண்ட கிட்டு அவர்கள்1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் சிறீலங்கா அரசால் திணிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு கந்தர்மடம் வாக்குச்சாவடியில் படைமுகாம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் ஜுலை 23ல் படை வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொள்கின்றார்.
இவவாண்டின் இறுதிக் காலத்தில் இந்திய மண்ணில் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவின் இரண்டாவது பொறுப்பாளராக கிட்டு நியமிக்கப் படுகின்றார்.
பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டுஅண்ணா அவர்கள் 1984 மார்ச் 02இல் நடைபெற்ற குருநகர் படைமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்துகின்றார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 09இல் எதிரியுடனான மோதலில் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு அண்ணா தலைவர் அவர்களால் நியமிக்கப்படுகின்றார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். காவல்துறை நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார்.
யாழ். மாவட்டத்தில் கிட்டு அண்ணாவின் வெற்றிகரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப்படை யாழ். மண்ணில் கிட்டு அண்ணாவின் பெயர் கேட்டால் முகாமுக்குள்ளேயே முடக்கப்படுகிறது. யாழ். கோட்டையை ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா படையினர் கிட்டு என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கிப் போகும் நிலை உருவானது. மக்கள் மத்தியில் கிட்டு அண்ணா என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது.
1987 மார்ச் இறுதியில் தேசத்துரோகியின் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்த கிட்டு தனது மனஉறுதியால் முன்னைய வேகத்துடனும் திடகாத்திரத்துடனும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பவராக வளர்ந்து வந்தார். இந்திய சிறீலங்கா ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டுஅவர்கள் ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில் இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலைப்பாட்டை வெளிக் கொணர பெரிதும் பாடுபட்டார்.இந்திய படைமெல்ல மெல்ல தோல்வி முகம் காணும் நிலை உருவானது. அமெரிக்காவிற்கு வியட்நாமும் ரஸ்யாவிற்கு ஆப்கானிஸ்தானும் புகட்டிய பாடத்தை தமிழீழம் இந்தியாவிற்குப் புகட்டியது. இந்நிலையில்சிறீலங்காஅரசு இந்தியாவை நிராகரித்து புலிகளுடன் பேச முன்வந்தது. 1989இல் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு அண்ணா விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டனுக்குப் பயணமானார்.
கிட்டு அண்ணா லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும் நம்பிக்கையையும் ஊட்டினார். களத்தில் எரிமலை' எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம் எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டார்.
விடுதலை உணர்வையும் தாய் மண்ணின் பற்றுறுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகாவண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார். எனினும் கிட்டு எங்குதான் வாழ்ந்தாலும் எப்பணியைச் செய்தாலும் அவர் மனம் தமிழீழ மண்ணையே சுற்றிவந்தது. அவர் தலைவரை தாயகத்தை தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார். தமிழீழத்தில் எப்போது தனது கால் மீண்டும் பதியும் என ஏக்கத்தோடு காத்திருந்தார். கிட்டுஅண்ணா எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுஅண்ணாவும் அவரது தோழர்களும் பயணமானார்கள். யாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது.
இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுஅண்ணாவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது. சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின. குமரப்பா புலேந்திரன் திலீபன் ஜொனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்கவைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுஅண்ணாவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாது தமிழீழத்தை தலைவனை நினைத்தவாறே விடுதலைப்புலிகளின் கொள்கைமரபிற்கு ஏற்ப எதிரதியின் கையில் பிடிபடாது தீயில் கலந்து வங்கக்கடலில் வீரவரலாறானார்கள்...
No comments:
Post a Comment