Friday, May 11, 2012

இலங்கையின் கொலைக்களங்களுக்கு 2 விருது


வியாழன், 10 மே 2012( 15:52 IST )
இலங்கையின் கொலைக்களங்கள்
 
சேனல் 4 வெளியிட்ட இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்திற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் ஒன் வேர்ல்ட் மீடியா அவார்ட்ஸஎனப்படும் புகழ்பெற்ற ஊடக விருது விழா நேற்றிரவு நடைபெற்றது.

அப்போது, இந்த ஆண்டின் சிறந்த தொலைக்காட்சிக்கான விருதையும், சிறந்த ஆவணப்படத்துக்கான விருதையும் ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ ஆவணப்படம் வென்றுள்ளது.

இந்த விருதுகளைத் தேர்வு செய்த நடுவர்கள் சேனல் 4 தொலைக்காட்சி துணிச்சல் மிக்கதும் அசாதாரணமானதுமான முயற்சியை பாராட்டியுள்ளனர்.

மேலும், பதில்கூறவேண்டிய கொடூரங்களை சேனல்4 தொலைக்காட்சி வெளிக்கொண்டு வந்துள்ளதாகவும், இந்த ஆவணப்படம் மூலம் இந்தக் கொடூரங்கள் அனைத்துலக கவனத்தை பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment