அமெரிக்காவுக்கும்
இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் புதுப்பித்துக்
கொள்வதற்காக, இலங்கை அரசாங்கம் வொசிங்டனைத் தளமாகக் கொண்ட ‘பற்றன் பொக்ஸ்‘
என்ற ஆதரவு தேடும் அமைப்பு ஒன்றை நியமித்துள்ளது.
ஈழப்போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரசுக்கும் அமெரிக்காவுக்கும்
இடையில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்யும் நோக்கிலேயே, ‘பற்றன் பொக்ஸ்‘
என்ற ஆலோசனை நிறுவனத்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது.
இந்த நிறுவனம் அமெரிக்க காங்கிரசுடனும், ஏனைய ஒழுங்கமைக்கப்பட்ட முகவரமைப்புகளுடனும் நெருக்கமான தொடர்பை வைத்துள்ளது.
இந்த நிறுவனம் இலங்கை விவகாரங்களைக் கையாளும் பொறுப்பை, விநோதா பஸ்நாயக்க என்ற இலங்கையின் இளம் நிபுணத்துவ ஆலோசகரிடம் வழங்கியுள்ளது.
இவர் இலங்கையின் முன்னாள் தலைமை நீதியரசர் பஸ்நாயக்கவின் பேரனாவார்.
அனைத்துலக கொள்கை மற்றும் வர்த்தக விவகாரங்களில் ஆலோசனைகளை வழங்கி வரும் இவர், வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு அமெரிக்காவின் கொள்கை மற்றும் அமெரிக்காவுடன் எவ்வாறு சிறந்த உறவுகளை பேணலாம் என்பது பற்றிய ஆலோசனைகளையும் வழங்கி வருபவராவார்.
வொசிங்டனில் மிகவும் செல்வாக்குள்ள 40 வயதுக்குட்பட்டவர்களின் பட்டியலில் இவரும் ஒருவராக தெரிவு செய்யப்பட்டவர்.
இவரை ஆரம்பத்தில் வொசிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் இரண்டாவது நிலை அதிகாரியாக நியமிக்க இலங்கை அரசாங்கம் முற்பட்டது.
ஆனால் அவருக்கு பெருந்தொகை ஊதியம் வழங்க வேண்டியிருந்ததால் அந்த முயற்சி தடைப்பட்டிருந்தது.
இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக நியுயோர்க் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நட்டஈட்டு வழக்கை ‘பற்றன் பொக்ஸ்‘ நிறுவனமே கையாண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment