Lebal

Tuesday, May 22, 2012

மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்த தமிழின படுகொலை நினைவேந்தல் நிகழ்வு:


pic1தமிழினப்படுகொலைக்கு நினைவேந்தும் நிகழ்வு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். மே பதினேழு இயக்கம் மற்றும் பெரியார் திராவிடர்கழகம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் பல
ஆயிரக்கணக்கான மக்கள் கட்சித்தலைவர்கள் தமிழ்உணர்வாளர்கள் கலந்துகொண்டு தங்கள் உணர்வினை வெளிப்படுதியதுடன் முற்றிவாய்க்கால் இனஅழிப்பு போரின் உயிரிழந்த மக்கள் போராளிகள் அனைவருக்கும் வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

அந்திமாலைப்பொழுதில் மெரினா கடற்கரையில் திரண்டமக்கள் சிங்கள அரசிற்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறும்,எழுச்சிபாடல்கள் பாடி பறைஅடித்து சிங்கள அரசு மீதான தங்கள் எதிர்ப்பு உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். மெரினா கடற்கரையில் முள்ளிவாய்கால் மண்ணில் விதையான மக்களுக்காக சிறப்பாக தமிழீழ வரைபடத்துடன் அமைக்கப்பட்ட பொதுச்சுடரினை லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ராம்விலாஸ் பாஸ்வான் ஏற்றிவைத்ததை தொடர்ந்து மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தங்கள் வணக்கத்தினை செலுத்தினார்கள்.
இன்றைய இன்நிகழ்வில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ,பழநொடுமாறன்,கொளத்தூர்மணி,வன்னிஅரசு,காசியானந்தன், திருமுருகன், உள்ளிட்ட கட்சி தலைவர்கள் தமிழ்உணர்வாளர்கள் என பலர் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.









No comments:

Post a Comment