Lebal

Tuesday, May 08, 2012

உறவுகளின் துயர்துடைக்கும் முகமாக கனடாவில் நடைபெற்ற 'கண்ணீர் வெடிகள்" நூல் வெளியீடு


ஈழத்தின் ஈரம்காயாத உயிர்ச்சித்திரமாய் உருவாக்கப்பட்ட கண்ணீர் வெடிகள் கவிநூல் வெளியீட்டு விழா கனடா சபரிமலை ஐயப்பன் ஆலய கலாசார மண்டபத்தில் மே.06.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 7:00 மணியவில் நடைபெற்றது. இந்நிகழ்வினை ஈழத்துப் பாவலர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் தலைமையேற்று நடாத்தினார்.

இக்கவிதை நூல் வெறும் கவிநூலாக மட்டுமன்றி ஈழத்தில் நடைபெற்ற துயரங்களின் சாட்சியமாகவும் பதிவு செய்யப்பட்டிருப்பதுடன் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழனும் இது போல தங்கள் சொந்த அனுபவங்களையும் வலிகளையும் பதிவுசெய்யவேண்டும் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.
'ஈழத்து வாழ்வின் கண்ணீர்க் கதைகளை சொல்லும் இக்கவிதைநூல் வெளியீடு அம்மக்களின் காயங்களுக்கு ஆறுதல் தரும் மருந்தாக அமையுமெனில் அதுவே இக்கவிதைகளுக்கு கிடைக்கும் அதிஉச்ச கொளரவமாக இருக்கும்" என நூலாசிரியர் ரவி இந்திரன் ஏற்புரையின் போது குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் இவ்வெளியீட்டால் கிடைக்கப்பெற்ற பணம் முழுவதும் போரின் காயங்களை சுமக்கும் மக்களுக்கு சென்றடையும் முகமாக கனடா வாழவைப்போம் அமைப்பிடம் விழா மேடையில் வைத்து வழங்கப்பட்டது.
இக்கவிதைத் தொகுப்பிற்கு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் பாவலர் அறிவுமதி அவர்களும் அணிந்துரையினை வழங்கியிருக்கின்றார்கள். உறவுகளின் கண்ணீர் துடைக்கும் முகமாக இக்கவிநூல் ஏனைய நாடுகளிலும் வெளியிட்டு வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment