Lebal

Friday, May 18, 2012

மணியோசை அதிர்வில் இடம்பெறும் கொள்ளைகள்:-தமிழீழத்திலிருந்து விஸ்ணு-


mahinda-familyஅந்த ஊரில் ஒரு கருவூலம் அமைக்கப்பட்டிருந்தது. அதற்குள் தங்க நகைகள், வைரங்கள் என கோடிக்கணக்கான பெறுமதியுள்ள சொத்துக்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றைக் கொள்ளையிட வேண்டுமென மூன்று சகோதரர்கள் திட்டமிடுகின்றனர். ஆனால், அக்கருவூலத்தின் காவலனோ மிகவும் திடகாத்திரமானவன். நான்கு ஐந்து பேரை வெறுங்கையாலேயே அடித்து மடக்கக் கூடியவன். எனவே
நேரடியாக அவனுடன் மோதி அவனை மடக்கிக் கொள்ளையிட முடியாது என்பதை உணர்ந்த சகோதரர்கள் வேறு ஒரு திட்டம் போடுகின்றனர்.
காவலாளி ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ஒரு பெரிய மணியை அடிப்பதுண்டு. அவன் தூங்காமல் இருப்பதற்காக கருவூலச் சொந்தக்காரர் செய்த ஏற்பாடு.

எனவேஇ காவலாளி முதல் மணியை அடிக்கும் போது சகோதரர்கள் கருவூலத்தின் பின்பக்க முதல் கதவை உடைக்கின்றனர். மணியோசையின் பெரும் சத்தத்தில் காவலாளியின் காதுக்குக் கதவு உடைத்த சத்தம் கேட்கவில்லை. இவ்வாறே இரண்டாவது மணி ஒலிக்கும் போது இரண்டாவது கதவையும் மூன்றாவது மணி ஒலிக்கும் போது கருவூலத்தின் கதவையும் உடைத்தனர். எல்லாப் பொருட்களையும் கொள்ளையிட்டுக் கொண்டு நான்காவது மணி ஒலிக்கும் போது மதிலேறிக் குதித்துத் தப்பி விடுகின்றனர்.
இந்தியாவிலுள்ள கோவில்களில் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த நகைகள் தங்கம், வைரங்களைக் கொள்ளையிட இந்தியா மீது 17 தடவைகள் கஜினி முகமது படையெடுத்தானாம். ஆனால் அவனால் இறுதியில் போரில் வெற்றி பெற்ற போதும் அந்த நோக்கத்தில் மட்டும் வெற்றி பெற முடியவில்லையாம்.
அவன் அந்த மூன்று சகோதர்களிடம் ஆலோசனை கேட்டிருந்தால் அவன் சில சமயம் தன் நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கக் கூடும். ஆனால் இன்று கஜினி முகமது உயிருடன் இருந்திருந்தால் நிச்சயமாக இலங்கையின் உச்ச அதிகாரத்தில் இருக்கும் ராஜபக்ச சகோதரர்களிடம் தொடர்பு கொண்டிருப்பான். மணியோசையை எழுப்பி கவனத்தை அதில் திருப்பி விட்டு கொள்ளையடிப்பது எப்படி என்பதில் பாண்டித்தியம் பெற்றவர்கள் இந்தச் சகோதர்கள்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களும் அவரின் சகோதரர்களும் ஒருபுறம் விழாக்களையும, கேளிக்கைகளையும், தேசப்பற்று மதப்பற்று போன்ற சுலோகங்களையும் ஓங்கி ஒலித்தவாறு மக்களின் இடுப்புத் துணியைக் கூடக் கழற்றியெடுப்பதில் இணையற்ற வல்லவர்கள். இவர்களிடம் ஏமாந்து போவதற்காகவே சபிக்கப்பட்டவர்கள் போன்று சிங்கள மக்களும் இழுபட்டுக் கொண்டேயிருக்கின்றனர்.
ஜெனிவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள்இ மனித உரிமை மீறல் என்பவற்றுக்கு எதிராக அமெரிக்காவால் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஒருபுறம் இத்தீர்மானத்தைத் தோற்கடிக்க ஜெனிவாவில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இன்னொரு புறம் நாடுநாடாக ஓடி ஆதரவு திரட்டப்பட்டது. இலங்கையிலோ அமெரிக்காவும் இதற்கு ஆதரவான நாடுகளும் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகவும் இலங்கையின் சுயாதிபத்தியம் மீறப்படுவதாகவும் பெரும் பரப்புரை நிகழ்த்தப்பட்டது. தேசப்பற்று என்ற பேரில் ஜெனிவாத் தீர்மானத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டி பெரும் பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன. அமெரிக்கப் பொருட்களைப் பகிஷ;கரிக்கும் படியும் அறைகூவல் விடுக்கப்பட்டது.
இப்படி மக்களுக்கு ஜெனிவாப் பூச்சாண்டி காட்டப்பட்ட அதேவேளையில் உள்ளூரில் எரிபொருட்களின் விலை கணிசமானளவு உயர்த்தப்பட்டது. முன்பு விலையேற்றம் 2 ரூபா அல்லது 3 ரூபாவால் இடம்பெறும். இம்முறை மண்ணெண்ணைய் விலை இரு மடங்காகவும்இ பெற்றோல் 31 ரூபாவாலும்இ டீசல் 34 ரூபாவாலும் விலைகள் கூட்டப்பட்டன.
இவ்விலையேற்றத்தை எதிர்த்து சிலாபம் மீனவர்கள் போராட்டம் நடத்தியபோது அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டார். எனினும்இ மீனவர் போராட்டம் தொடர்கிறது. இதன் பின்பு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலையிட்டு தேசத்தின் நலன்கருதி போராட்டத்தை ஒத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அதனுடன் போராட்டம் பிசுபிசுத்துப் போனது. கூடிய விலை உயர்வை அடுத்து போக்குவரத்துக் கட்டணங்கள் இ பாவனைப் பொருட்களின் விலையுயர்வு என்பன இயல்பாகவே ஏற்பட்டன. மக்களின் தலையில் மின்சாரக்கட்டணம் உட்பட சுமைக்கு மேல் சுமை ஏற்றப்பட்டது. மக்கள் ஜெனிவா மாயையில் மயங்கி தேசபக்தி முத்தி திக்குமுக்காடிக் கொண்டிருக்க அவர்களின் வாழ்க்கைச் செலவு பல மடங்காக உயர்ந்தது. அவர்கள் அமெரிக்கா மஹிந்த ராஜபக்சவை மின்சார நாற்காலியில் ஏற்றச் சதி செய்கிறது என்ற பொய்யான ஒப்பாரியில் மயங்கிப் போய்க் கிடந்தனர்.
அந்தச் சூடு தணியும் முன்பே வாகன இறக்குமதி வரி கூட்டப்பட்டது. அதுவும் எரிபொருள் செலவினத்தையும் வாகன விபத்துக்களையும் தவிர்க்கவே எனக் கூறப்பட்டது. பாவம் சிங்கள மக்கள் அதையும் நம்பினர்.
அடுத்து ஒன்றுபட்ட தேசம் என்ற தொனிப்பொருளில் மே தினம் கொண்டாடப்பட்டது. நாடு முழுவதுமுள்ள மக்கள் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டு மஹிந்த சிந்தனைக்கு ஆதரவாகக் கோசம் போட்டுக் கொண்டிருக்க பாணின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே அரசால் கோதுமை மாஇ பருப்புஇ சீனி என்பனவற்றின் விலையேற்றம் ஆகியன மக்களுக்கு மேதினப் பரிசாக வழங்கப்பட்டு விட்டன.
இறுதியாக மக்கள் கொழும்பிலும் , கண்டியிலும் , அனுராதபுரத்திலும் ஒவ்வொரு கிராமங்களிலும் வெசாக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்ட அலங்காரப் பந்தல்களின் அழகில் மயங்க பால்மா, சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு வெசாக் காலப் பரிசாக அரசால் வழங்கப்பட்டிருக்கின்றது.
அதாவது மணியோசை ஒலிக்குள் லாவகமாகக் கொள்ளையை நடத்திய சகோதரர்கள் போன்று இலங்கை அரசு விழாக்கள் பேரணிகள் என்பவற்றின் ஒலிக்குள் விலையேற்றம் கொள்ளையை லாவகமாக நடத்திவருகிறது.
இ;வ்வகையில் மேலும் சில விலையுயர்வுகள் வரலாம். அரசு அதற்கெல்லாம் தயங்கப்போவதில்லை. ‘புலிவருகுது’ என ஒருமுறை கத்தி விட்டால் போதும் சிங்கள மக்கள் கவனம் அங்கே போய்விடும். வேண்டியளவு விலைகளை உயர்த்திவிடலாம்.
இத்தகைய விழாக்கள், கேளிக்கைகள், ஆர்ப்பாட்டப் பேரணிகள் போன்றே இலங்கை அரசின் நாகரீகக் கொள்கைகளை மறைக்கும் இன்னுமொரு மணியோசை அதிர்வுமுண்டு. அதுதான் மத்திய வங்கி அறிக்கை. ஐக்கிய தேசியக் கட்சி இது பற்றிக் கருத்து வெளியிடும் போது இந்தியாவில் ஒரு அக்கினி ஏவுகணை ஏவப்பட்டது போல் இலங்கையில் ஒரு ஏவுகணை ஏவப்பட்டதாகக் கிண்டல் செய்துள்ளது. அதாவது மத்திய வங்கயின் அறிக்கையில் காணப்படும் விடயங்கள் அதிர்ச்சியூட்டுவதாகவும் நம்பமுடியாதனவாகவும் உள்ளன என்பது தான் இங்கு குறிப்பிடப்படும் அடிப்படை விசயமாகும்.
இலங்கையில் 2011ம் ஆண்டில் 8.3 வீத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாம். இது மத்திய வங்கி ஆளுநர் கோப்ரால் அவர்களால் வெளியிடப்பட்ட மத்திய வங்கி அறிக்கையில் காணப்பட்ட அதிசயம்.
அமெரிக்கா, சீனா, மேற்குநாடுகள் என உலகநாடுகள் பொருளாதார நெருக்கடிக்குள் அகப்பட்டு வளர்ச்சி வீதம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் ஒட்டுமொத்தமாகவே ஒரு தங்குநிலைப் பொருளாதாரத்துக்குள் தன்னை உட்படுத்திக் கொண்ட இலங்கை 8.3 வீத பொருளாதார வளர்ச்சி கண்டிருக்கிறது என்பது ஒரு அதிசயம் தான்.
மிக வேகமாகப் பொருளாதார வளர்ச்சியடைந்து கொண்டிருந்த இந்தியா கூட உலகப் பொருளாதார நெருக்கடிஇ எரிபொருள் விலையுயர்வுஎன்பன காரணமாக பெரும் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சிக்கு முகம் கொடுத்துள்ளது. மத்திய வங்கி அறிக்கைக்கு பக்கப்பாட்டாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் இலங்கையில் அரிசி உற்பத்தி, மரக்கறி உற்பத்தி என்பன அதிகரித்து விட்டதாகவும் அவற்றை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஒரு குண்டைப் போட்டிருக்கிறார்.
அப்படியானால் ஏன் கோதுமை இறக்குமதி குறைக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறதல்லவா? அடிப்படை உண்மை என்னவெனில் களஞ்சிய வசதிகள் இ திட்டமிட்ட விநியோக முறைகள்இ உணவு பதனிட்டுப் பாதுகாக்கும் வழிமுறைகள் எதுவுமே சீராக இல்லாத நிலைமையில் விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்க முடியாமல் திண்டாடுகின்றனர். ஆனால் தங்கள் தேவைக்கேற்ற அரிசி மரக்கறி வகைகளை வாங்கமுடியாத மக்கள் இக்கட்டில் முப்பது வீதத்துக்கு அதிகமாக உள்ளனர் என்ற விசயம் மறைக்கப்பட்டே விடுகிறது.
அதுமட்டுமன்றிஇ மத்திய வங்கியின் அறிக்கையில் இலங்கையின் தனிநபர் வருமானம் 2500 டொலராக அதிகரித்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால் இந்நாட்டில் வாழும் தனிநபர் ஒருவர் குறைந்த பட்சம் மாதம் ரூபா 20000 வருமானம் பெற வேண்டும். ஏறக்குறைய பத்து லட்சம் மலையகத் தொழிலாளர்கள் மாதமொன்றுக்கு 12000 ரூபாவுக்கு குறைந்த வருமானம் பெறும் நிலையில் , சாதாரண அரசாங்கப் பணியாளர் ஒருவர் ரூபா 18000 பெறும் நிலையில், ஒரு ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ரூபா 15000 பெறும் நிலையில் விவசாயிகள் , ஏனைய தொழிலாளர்கள் தமது வருமானத்தின் மூலம் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியாமல் தள்ளாடும் நிலையில் எப்படி இலங்கையின் தனிநபர் சராசரி வருமானம் 2500 டொலராக இருக்க முடியும்?
ஒருசில தொழில் ஒப்பந்தக்காரர்கள், அரசியல்வாதிகள், இறக்குமதி முகவர்கள், தொழில் கொள்வோர், தரகர்கள் அதிக வருமானம் பெறுகின்றனர் என்பது உண்மைதான். எனினும் அது சாதாரண மக்களின் வாழ்வில் எவ்வித பயனையும் ஏற்படுத்தப் போவதில்லை.
அடுத்த குண்டு பணவீக்கம் 6.7 வீதத்தால் குறைவடைந்துள்ளதாம். மக்களுக்குத் தேவையான பொருட்களின் விலைகள் 10 வீதத்திலிருந்து 40 வீதம் வரை அதிகரித்துள்ளன. இந்நிலையில் பணவீக்கம் குறைவடைந்துள்ளது என்பது எத்தகைய வெடிகுண்டு என்பதை ஒரு சிறுபிள்ளை கூடப் புரிந்து கொள்ள முடியும்.
அண்மைய உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து விட்டது. அந்த நிலையிலும் கூட அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு எதிராக இலங்கை நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்து விட்டது. திறைசேரியின் வைப்பு நிதியிலிருந்து ஒரு பகுதியை நாணயச் சந்தையில் மிதக்க விட்ட போதிலும் இலங்கையின் நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை. இப்படியான நிலையில் பணவீக்கம் குறைந்துள்ளது என்பதை எவரால் நம்பமுடியும்.
அடிப்படையில் இலங்கை அரசு பெரும் மணியோசைகளை எழுப்பி மக்களின் கவனத்தை அவற்றில் திசை திருப்பி விட்டு விலைவாசிகளை ஏற்றி உள்ளூர் உற்பத்தி வாய்ப்புக்களைச் சிதைத்து மக்களை மேலும் மேலும் பட்டினிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது. அரசின் பொருளாதாரக் கொள்கையால் ஏற்படும் பின்னடைவுகள் அத்தனையும் மக்கள் தலையிலேயே சுமத்தப்படுகின்றன. இனவாதம் தோய்க்கப்பட்ட இந்த மணியோசைகளின் அதிர்வுகள் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது.
எனினும்இ சிங்கள மக்கள் விழிப்படைந்து தாங்கள் ஏமாற்றப்படுவதை உணராத வரையில் இலங்கை படுபாதாளத்தை நோக்கித் தள்ளப்படுவதும் பட்டினிச் சாவுகளை எதிர்நோக்கும் நிலை உருவாவதும் தடுக்க முடியாததாகும்.
-தமிழீழத்திலிருந்து விஸ்ணு-



No comments:

Post a Comment