உலகப்
பிரசித்தி பெற்ற கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றான அமெரிக்காவின் Basilica
of the National Shrine of the Immaculate Conception தேவாலாயத்தில்,
தமிழர்களின் நீதிக்கான வேண்டுதல் பிரார்த்தனை நிகழ்வு இன்று
இடம்பெறுகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், உலகத் தமிழர்கள் தேசங்களெங்கும் முன்னெடுக்கபட்டுவரும் சர்வமத வழிபாட்டு
விழிப்புணர்வு போராட்டத்தின் ஒர் அங்கமாக, இத்தேவாலயத்தில் தமிழர்களின் நீதிக்கான வேண்டுதல் பிரார்த்தனை இடம்பெறுகின்றது.
தமிழீழத் தாயகத்திலும், சிறீலங்காவிலும் இந்து, இஸ்லாமிய, கிறீஸ்தவ மக்களின் மதச் சுதந்திரத்திற்கும், வழிபாட்டு உரிமைக்கும் எதிராக, சிங்கள பௌத்த இனவாதிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் வன்முறைகளையும், அத்தமீறல்களையும் கவனத்தில் கொண்டு, இந்த சர்வமத மதவழிபாட்டு ஒன்றுகூடல்கள் இடம்பெற்று வருகின்றன.
வட அமெரிக்காவின் இந்த பெருந்தேவாலயம் தவிர்ந்த Ganesha Temple, New York, / Lutheran Church, New York / Bharatiya Hindu Temple ,3671 Hyatts Rd ,Powell, Ohio ஆகிய வழிபாட்டுத் தளங்களிலும், பிரார்த்தனை ஒன்றுகூடல்கள் இடம்பெறுகின்றன.
இதேவேளை பிரான்சில் 124 Bis, Rue de Bagnolet, 75020 Paris அமைந்துள்ள தேவாலயத்திலும் மற்றும் ஜேர்மனியில் சென்- அந்தோனியார் முன்ஸ்ரர் தேவாலயத்திலும் என உலகின் பல்வேறு பாகங்களிலும் தமிழர்களின் நீதிக்கான வேண்டுதல் பிரார்த்தனைகள் இடம்பெறுகின்றன.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த மூன்று நாட்களாக உலகத் தமிழர் தேசங்களெங்கும் இப்பிரார்த்தனை வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

No comments:
Post a Comment