Lebal

Monday, June 11, 2012

டெசோ அமைப்பு இலங்கை தமிழர்களுக்கோ, தமிழக தமிழர்களுக்கோ பயனும் அளிக்காது-பழ. நெடுமாறன்


pazha-nedumaranகருணாநிதி டெசோ அமைப்பை மீண்டும் உருவாக்கி இருப்பது மத்திய அரசை மிரட்டுவதற்குதான். இதன் உருவாக்கமும், செயல்பாடும் இலங்கை தமிழர்களுக்கோ, தமிழக தமிழர்களுக்கோ எந்த பயனும் அளிக்காது என்று உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார். மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் வரலாற்றுத் துறை பேராசிரியர் ஜெயராமனுக்கு வரலாற்றுத் துறை முன்னாள் மாணவர்கள் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக உலகத் தமிழர்
பேரமைப்புகள் தலைவர் பழ. நெடுமாறன் கலந்து கொண்டு பேராசிரியர் ஜெயராமனை பாராட்டி பேசினார். நிகழ்ச்சி முடிந்ததும் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:- இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு முழுக் காரணம் மத்திய அரசு தான்.
தொன்று தொட்டு இலங்கைக்கு ஆயுதம் அளித்து பயிற்சி அளிப்பது தமிழர்களை கொன்று குவிக்கதான் என்று மத்திய அரசுக்கு நன்றாக தெரியும். கருணாநிதி டெசோ அமைப்பை மீண்டும் உருவாக்கி இருப்பது மத்திய அரசை மிரட்டுவதற்குதான். இதன் உருவாக்கமும், செயல்பாடும் இலங்கை தமிழர்களுக்கோ, தமிழக தமிழர்களுக்கோ எந்த பயனும் அளிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment