தனித்
தமிழீழம் அமைய ஐக்கிய நாடுகள் சபையிடம் தமிழ்மக்களிடையே பொது வாக்கெடுப்பு
நடத்தக்கோரி தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கோடி கையெழுத்து இயக்கம்,
தொடர்ச்சியாக கனடா தமிழீழ மக்கள் அவையினால் தொடரப்பட்ட நிலையில் உலகத்தில்
வாழும் தமிழ் மக்கள் யாவரும், மாபெரும் இனப்படுகொலையில்
மாண்டுகொண்டிருக்கும் தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழ, தமிழீழமே மக்கள்
கொடுத்த ஆணை.
அந்த ஆணையை 1977ஆம் ஆண்டும், தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களிலும் மக்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
1995 ஆண்டில் இருந்து தமிழீழ இடைக்கால அரசு நடைமுறையில் இருந்து தமிழீழ
மக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும், இன மத பிரிவின்றி, தன்னிறைவு
அடைந்த வாழ்வை வாழ்ந்தார்கள்.
இந்த நேரத்தில் சர்வதேச புவியல் அரசியலில் சிக்குண்டு தமிழீழ அரசு
அழிக்கப்பட்டு, தமிழீழ மக்கள் சுதந்திரமற்ற இனமாக வாழ்த்து கொண்டு
இருக்கும் நிலையில்.
இன்று ஐக்கிய நாடுகள் சபை தாம் தமிழீழ மக்களை பாதுகாக்க தவறிவிட்டோம், சிறி
லங்காவில் எமது செயல்பாடு சரியாக இருக்கவில்லை என்பதை ஒத்துக்கொள்வதோடு
மீண்டும் இவ்வாறு வேறு எங்கும் நடைபெறாமல் இது தமக்கு ஒரு பாடமாக
அமையட்டும் என்று கூறி நிற்கிறார்கள்.
மிக சாதாரணமாக அவர்கள் அறிக்கைள் விட்டு இருக்கிறார்கள்.
மிக சாதாரணமாக அவர்கள் அறிக்கைள் விட்டு இருக்கிறார்கள்.
இழந்தவர்கள் நாம், மண் இழந்து தாய் இழந்து மொழி கலாச்சாரம் இழந்து உலகம்
முழுவதும் அழைக்கிறோம்! இதற்கு நீதி தரவேண்டும்! தாய் , தந்தை, சகோதர
சகோதிரிகளை இழந்து, மன நோயால் பாதிக்கப்பட்ட இனமாக இருக்கும் எங்களுக்கு
இதே ஐக்கிய நாடுகள் சபை நீதி தரவேண்டும்!
எமது மக்களின் வாழ்வுரிமையை தீர்மானிக்க வேண்டியவர்கள் நாம்
தமிழர்களேவொளிய, சர்வதேசமல்ல! ஆகவே ! இன்று தமிழ்நாட்டு மக்கள், அவர்களுடன்
சேர்ந்து எமது கனடிய தமிழீழ மக்கள் ” தனி ஈழமே தீர்வு- ஐ நா மன்றமே பொது
வாக்கடுப்பு நடத்து” என்று அதற்க்காக ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை
ஆரம்பித்து இருக்கிறார்கள்.
அந்த இயக்கத்தில் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை இணைந்து கொண்டு ஐக்கிய
நாடுகள் சபையிடம், அதில் அங்கம் வகிக்கும் நாடுகளிடம், இன்றும்
இனப்படுகொலைக்குள் சிக்குண்டு இருக்கும் மக்களிடம் விடுதலைக்கான ஆணையை
மீண்டும் கொடு, எம்மிடமிருந்து பறித்த எமது நல்லாட்சியை மீண்டும்
தமிழர்களிடம் மீளளிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு கோடிக்கு
அதிகமாக சர்வதேசம் எங்கும் இருக்கும் தமிழீழ மக்கள், உலகத்த தமிழர்களாக,
உலக மக்களாக இந்த இலக்கை அடையும் செயதிட்டதில் செயல் படவேண்டும் என்று
கூறுவதுடன், இந்த கையெழுத்து இயக்கம் பிரான்சில் மாவீரர் தினத்தில் தமிழீழ
விடுதலை போராட்டத்தில் தமது இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரரையும் மக்களையும்
நினைவு கூண்டு “ஒரு கோடி கையெழுத்து போராட்டம் ஆரம்பித்து வைக்கப்படும்.
: தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

No comments:
Post a Comment