Sunday, November 25, 2012

திருக்குறள் மணி புலவர் இறைக்குருவனார் காலமானார்!


 திருக்குறள் மணி புலவர் இறைக்குருவனார் 23.11.2012 இரவு சென்னை மேடவாக்கத்தில் காலமானார். இவரது உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னை மேடவாக்கத்தில் உள்ள பாவலரேறு தமிழ் கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 25.11.2012 காலை 10 மணி அளவில் மேடவாக்கத்தில் உடல் அடக்கம் நடைபெறுகிறது.


தொடர்புக்கு: 9841228523
திருக்குறள் மணி புலவர் இறை குருவனார் வாழ்க்கை குறிப்பு:-
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் சீவாமங்களம் என்ற சிற்றூரில் கோ.முத்தையா - மீனாட்சி அம்மை தம்பதிகளுக்கு 1942 ஏப்ரல் 2ல் பத்தாவது மகனாக பிறந்தவர் இறை குருவனார். நன்னிலம் உயர் நிலைப்பள்ளியில் படித்த இவர் அண்ணாமலைக்கழகத்தில் புலவர் படிப்பு படித்தவர். பள்ளி பருவத்திலேயே திருக்குறள் முழுவதையும் மனப்பாடம் செய்தவர்.


வள்ளுவர் வாழ்த்துப் பாமாலை என்னும் பாடநூலை அச்சிட்டு வெளியிட்டவர். பள்ளிப் பருவத்திலேயே மறைமலையடிகளாரின் திருவாசக விரிவுரை தொடங்கி அனைத்து நூல்களையும் ஆய்ந்து தமிழிலும், சிவநெறியிலும் ஈடுபாடு கொண்டவர். இந்தி எதிர்ப்பு போரில் அண்ணாமலைக்கழக மாணவனாக முன்னின்று போராடியவர். அப்போது மொழி புரட்சி என்ற நூலை எழுதி வெளியிட்டார். பல்கலைக்கழக படிப்பு சூழுலில் திருக்குறள், பரிமேலழகர் உரை, ஆத்திச்சூடி உள்ளிட்ட 10 அறநூல்களைப் பற்றிய திருக்குறள் அறநூல் பரிசு திட்டம் என்ற போட்டியில் கலந்து கொண்டு வென்றார். பைந்தமிழ் பாவலர் பேராசியர் ஆர்.சி.பரந்தாமனார், இறை திருக்குறள் மணி என்ற சிறப்பு பெயரால் பாராட்டினார். சித்தாந்த புலவர் முருகதம்பிராசு அவர்களிடம் மெய்கண்ட நூல்கள் பயின்றார். நல்ல தமிழ் பேசவும், உரை நிகழ்த்தவும் மறைமலை அடிகள் சொற்பயிற்சி மன்றம் என்ற அமைப்பை நிறுவி நடத்தினார்.
சிறுநெரி கழகம் என்ற அமைப்பை நிறுவி திருவேற்களம் கோவிலில் வாரவழிபாடும் திருதொண்டபுராணம் சொற்பொழிவும் நடத்தினார். குன்றக்குடி அடிகளாரின் சொற்பொழிவை வாழ்க்கை வட்டம் என்னும் பெயரில் எழுத்தோவியமாக்கினார். அடிகளாரை சிறப்பாரியராக கொண்ட தமிழகம் என்னும் இதழில் பொறுப்பேற்று நடத்தினார். பாவை என்ற பெயரில் இதழ் நடத்தினார்.
தேவநேயபாவணார் அவர்களை தலைவராக கொண்ட உலகத் தமிழ் கழகம் என்னும் அமைப்பின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று நடத்தினார். வலம்புரி என்ற இதழையும் தொடங்கி நடத்தினார். இலக்கிய சொற்பொழிவுகளும் சிலப்பதிகார தொடர் சொற்பொழிவுகளும் திருக்குறள் தொடர் சொற்பொழிகளும் பல ஆண்டுகளாக நடத்தியுள்ளார். சிங்கப்பூர், மலேசியா, தமிழ் ஈழத்திற்கும் சென்று திருக்குறள் மற்றும் இலக்கிய சொற்பொழிவுகள் ஆற்றி தமிழ் மரவர்களையும் தலைவர்களையும் சந்தித்துள்ளார். சைவ சித்தாந்த நூல்பதிப்பு கழகத்தில் சில ஆண்டுகள் கழக புலவராக பணியாற்றினார். முரசொலி ஏட்டில் சில ஆண்டுகள் துணை ஆசிரியராக பணியாற்றினார். பாவலரேறு பெருந்சித்தனாரின் மறைவுக்குப் பிறகு அவர் நடத்திய தென்மொழி இதழின் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
தமிழ் தேசிய இன எழுச்சி மற்றும் ஈழ தமிழர் ஆதரவு போராட்டங்களிலும் ஈடுபட்டு அவ்வப்போது சிறைப்படுத்தப்பட்டார். தமிழ் தேசிய செம்மல், மொழிப் போர் மறவர், இதழ் மாமணி ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். திருக்கழுக்குன்றம் மறைமலை அடிகள் மன்றத்தின் சார்பில் முழுநிலவு தோறும் திருக்குறள் தொடர் விரிவுரை வகுப்பு நடத்தி வந்தார்.
இவர் இயற்றிய நூல்கள்:- வள்ளுவர் வாழ்த்துப் பாமாலை (பாடல்கள்), மொழிப் புரட்சி (கட்டுரை), வைரமூக்குத்தி (செய்யுள் நாடகம்), சிலம்பிற் பிழையா (இலக்கிய ஆராய்ச்சி நூல்), தமிழினம் அன்றும் இன்றும் (சொற்பொழிவு), திருவள்ளுவர் ஆண்டு அல்லது தமிழ் ஆண்டு (பாலவியல் விளக்கம்), நூலைப் படி (கட்டுரை), பாவேந்தரும் பைந்தமிழும் (சொற்பொழிவு), வல்-ணம் மிகுதலும் மிகாமையும் (இலக்கணம்), மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ் (சிற்றிலக்கியம்), தமிழாரம் (கட்டுரை தொகுப்பு), தமிழ் வழிக் கல்வி தடையும் விடையும் (கல்வியியல்), தமிழ்நாட்டில் பிறமொழி கவர்ச்சி (கட்டுரை), வாழ்வியர் சொல் அகரமுத- (அகராதி), தமிழரா திராவிடரா (கட்டுரை), திருக்கோவில் வழிபாடும் தமிழ் குடமுழுக்கும் (கட்டுரை), திருக்குள் நெறி திருமணம் (கையேடு), மொழிஞயாறு பாவாணர் ஓர் அறிமுகம், சித்தேரி அம்மாணை (குறிப்புரை), சிலை எழுவது (உரையும் விளக்கமும்), கந்தர் சஷ்டி கவசம் (குறிப்புரை), சிறிய திருமடல் (உரை விளக்கம்), மதுரை சொக்கநாகர் வருக கோவை (உரை விளக்கம்).
-ராஜவேல்

source: nakkheeran

No comments:

Post a Comment