Thursday, September 26, 2013

லண்டனில் நடக்கவுள்ள இன அழிப்பு தொடர்பான மாநாடு !


முள்ளிவாய்க்காலின் பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் அக-புறச் சூழலில் இலங்கைக்தீவுக்கு வெளியேயான ஈழத் தமிழர் அரசியலின் ஒர் அங்கமாக கனடாவிலும் இங்கிலாந்திலும் இரண்டு மாநாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைகொண்டு நடைபெறுகின்றதென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதிர்வரும் செப்டெம்பர் 28 - 29 நாட்களில் இடம்பெறுகின்ற இவ்விரு மாநாட்டிலும் துறைசார் வளஅறிஞர்கள் பலரும் பங்கெடுக்கவுள்னர் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

இங்கிலாந்து மாநாடு :


'இலங்கையில் தமிழினப் படுகொலையும் பொறுப்புக் கூறலும் ;அத்தோடு உலகிற்கு அதன் குறிப்பான முக்கியத்துவமும்' என்பது பற்றிய லண்டன் கருத்தரங்கம் செப்ரெம்பர் 28-29 சனி ஞாயிறு இருநாட்களும் நடைபெறும். அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைக் குழு உறுப்பினர் பேராசிரியர் சொர்ணராஜா செயற்படுவார்.

இனப்படுகொலையில் ஈடுபடும் சிறிலங்காவிற்கு மட்டுமல்லாது ஏனைய நாடுகளுக்கும் ஒரு தைரியத்தை ஏற்படுத்துகின்ற ஈழத் தமிழரின் இனப்படுகொலைக்குப் பொறுப்பானவர்களை அதற்குப் பொறுப்புக் கூற வைப்பதை உறுதிப் படுத்தும் ஒன்றாகவே இக்கருத்தரங்கு அமையும். இதில் இலங்கைத்தீவில் நடந்த படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்களை அதற்குப் பொறுப்புக் கூறவைக்கும் வழிமுறைகள் பற்றி பரிசீலிக்கப்படும். எவ்வளவுதான் உயர் பதவிகளில் இருந்தாலும் அவர்கள் தண்டனைக்குள்ளாவதற்கான ஒரு உறுதியான செயற்பாட்டின் முன்னுதாரணங்களாக அவை அமையும்.

இன்று அனைத்துலக மட்டத்தில் இடம்பெறும் பல்வேறு இனமுரண்பாடுகள் காரணமாக அப்படியான சர்வதேச சட்டங்களில் வெளிப்படுகின்ற உண்மைக் கோட்பாடுகள் பாரிய முக்கியத்துவம் பெறுகின்றன. இனப்படுகொலைக்கு பரிகாரமாக அவ்வினத்தின் சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பது பற்றியும் சர்வதேச சட்டங்களில் உள்ள ஏனைய கோட்பாடுகள் பற்றியும் இந்த இருநாள் கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.

பேராசிரியர் பிரான்சிஸ் போயில், பேராசிரியர் சொர்ணராஜா, பேராசிரியர் பீட்டர் ஷார்க், சட்டத்தரண் டேவிட் மாடாஸ், திரு கிருபாகரன், சட்டத்தரணி அலி பெய்டோவ், திரு பிரயன் செனிவிரட்ன (கானொளி மூலம்), பேராசிரியர் மணிவண்ணன் (காணொளி மூலம்) போன்ற இன்னும் பலர் பங்கேற்க உள்ளார்கள்.

இவ்விரு மாநாடுகள் பற்றிய மேலதிக தொடர்புகளுக்கு:- லண்டன் :- பிரதி அமைச்சர் திரு மணிவண்ணன் email: manip30@gmail.com - கனடா:- அமைச்சர் திரு நிமல் விநாயகமூர்த்தி email: nimal.vinayagamoorthy@tgte.org

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Everyone "speaking" but no one "doing".
    Along with it, please consider evolving a "political solution" that would get the support of the International community without much difficulty.

    ReplyDelete