
திருமலையிலும் மனித புதைக்குழி... பாதுகாப்பு நடவடிக்கையில் படையினர் இருப்பதால், ஊடகவியலாளர்கள் உட்பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை மக்கெய்சர் விளையாட்டரங்கில் இடம்பெற்று வரும் புனரமைப்பு பணிகளின் போது மனித புதைக்குழியொன்று உள்ளமை தென்பட்டுள்ளதாகவும் இதனை பார்வையிட ஊடகவியலாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை மக்கெய்சர் விளையாட்டரங்கை மறுசீரமைப்பு செய்துவரும் நிலையில் அப்பகுதியில் கிணறு ஒன்று அமைப்பதற்காக நேற்றிரவு குழியொன்று வெட்டப்பட்டுள்ளது.
இதன்போது மனித எலும்புக்கூடுகள் தென்பட்டதாக உறுதிப்படுத்தப்பட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து குறித்தப் பகுதியில் பாதுகாப்பிற்காக படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதோடு ஊடகவியலாளர்களுக்கு உட்பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
source:athirvu
No comments:
Post a Comment