Lebal

Saturday, February 15, 2014

புலிகள் -ஐ.ஆ.ஏ இயக்கம் லண்டனில் குண்டு வைத்தது யார் ?


நேற்றைய தினம்(13) லண்டனே ஆடிப்போன விடையம் ஒன்று நடந்துள்ளது. நீண்ட காலமாக உறங்கிக்கிடந்த மிருகம் ஒன்று மீண்டும் கண்விழித்துள்ளது என்று தான் கூறவேண்டும். பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை வேண்டும் என்று பலகாலமாகப் போராடி வரும் ஐயர்லாந்து விடுதலை அமைப்பு(ஐ.ஆ.ஏ) தனது ஆயுதப்போராட்டத்தை நிறுத்தி ஒரு அரசியல், கட்சியாக மாற்றம் பெற்றது. முன்னர் ஒரு காலத்தில் லண்டனில் பல இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கவைத்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த அந்த அமைப்பை, பிரித்தானியா ஒருபோது தடைசெய்தது இல்லை. சில காலம் தடைசெய்திருந்தால் கூட, பின்னர் அதன் தடையை எடுத்துவிட்டார்கள். இவர்கள் பிரித்தானியாவில் செய்தது போல முஸ்லீம் தீவிரவாத அமைப்புகள் கூட செய்யவில்லை. அப்படி இருக்கும்போது விடுதலைப் புலிகளை ஏன் பிரித்தானியா தடைசெய்தது ?


வாருங்கள் விடையத்திற்குச் செல்லலாம் ! நேற்றைய தினம் பிரித்தானியாவில் உள்ள சுமார் 4 இராணுவ மையங்களுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த இந்த சிறிய பார்சல் அனைத்தும் ஐயர்லாந்தில் இருந்து தான் அனுப்பப்பட்டது என்று பிரித்தானிய உளவுத்துறையின் கண்டறிந்துள்ளார்கள். இராணுவ மையங்களுக்கு அனுப்பப்பட்ட இந்த பார்சலை, யாரவது திறந்தால் அது உடனே வெடிக்கும் வகையில் அது செட்-டப் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதிஷ்டவசமாக அனுப்பப்பட்ட 4 பார்சலும் வெடிக்கவில்லை. இராணுவ மையங்களுக்கு உடனே விரைந்த வெடிகுண்டுப் பிரிவினர், குண்டை செயலிழக்கச் செய்துள்ளார்கள். ஒரு காலத்தில் லண்டனில் உள்ள பல மையங்களை ஐ.ஆ.ஏ இவ்வாறு தாக்கியது. பல இடங்களில் வெடிகுண்டுகளை வைத்தது.

பின்னர் தாம் அரசியலில் இறங்குவதாக அறிவித்து ஜனநாயக நீரோட்டத்தில் கலந்துவிட்டதா கூறினார்கள். அந்த இயக்கத்தில் இருந்த கடும்போக்காளர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். அவர்களில் மாற்றம் இல்லை என்பது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இவ்வாறு தமது நாட்டிற்கு நேரடியாக அச்சுறுத்தல் விடும் இந்த அமைப்பை தீவிரவாதப் பட்டியலில் சேர்க்கவில்லை பிரித்தானியா. ஆனால் 5000 மைல்களுக்கு அப்பால், எங்கோ ஒரு தீவில் உள்ள ஒரு விடுதலை இயக்கத்தை அவர்கள் தீவிரவாதப் பட்டியலில் இணைத்துள்ளார்கள். லண்டனில் விடுதலைப் புலிகள் என்ன வெடிகுண்டு வைத்தார்களா ? இல்லையே. இதனை பிரித்தானிய அரசுக்கு எடுத்துச் சொல்லக்கூட பலருக்கு துணிவில்லை. பிரித்தானிய அரசுடன் மற்றும் எதிர்கட்சியுடன் ஒட்டி உறவாடும் எத்தனையோ தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் எவரும் இதனைப் பற்றிப் பேசத் தயார் இல்லை என்பதே தற்போதைய நிலை ஆகும்.

விடுதலைப் புலிகளும், அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கொடியும்(புலிக்கொடி) தான் தமிழர்களின் அடையாளமாக இன்றுவரை இருக்கிறது. அதனை நாம் இழந்தால் எமது அடையாளத்தை இழந்தவர்களாவோம்.
தமிழர்கள் செறிந்து வாழும் , பிரித்தானியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் புலிகளுக்கான தடை நீக்கப்படவேண்டும். இதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படவேண்டும். அதற்கு இதுவே சரியான தருணமும் கூட. இலங்கை அரசாங்கம் போரில் வெற்றிபெற அவர்கள் புலிகள் மீது பழி சுமத்தில் அவர்களை அன்னியப்படுத்தினார்கள். இதனூடாகவே அவர்கள் போரில் வெற்றிபெற்றார்கள். எனவே அதனை நாமே முறியடிக்கவேண்டிய கடைப்பாட்டில் உள்ளோம். சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுடன் பேசி, புலிகளுக்கான தடையை நாமே நிக்கவேண்டும்.




No comments:

Post a Comment