நவிப்பிள்ளையின் அறிக்கை வெளியாகியுள்ளது: சர்வதேச விசாரணை தேவை !
ஐ.நா
மனித உரிமை கவுன்சில் செயலாளர் நவிப்பிள்ளையின் அறிக்கை தற்போது
வெளியாகியுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. மார்ச் மாதம் ஜெனீவாவில்
நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கடுமையான
தீர்மானம் ஒன்றை கொண்டுவரவுள்ள நிலையில், நவிப்பிள்ளையும் தனது அறிக்கையை
சமர்பிக்கவுள்ளார். மிகவும் இரகசியமாக வரையப்பட்ட இந்த அறிக்கை தற்போது
வெளியாகியுள்ளது. அதில் அவர் இலங்கையில் கடந்த காலங்களில் நடந்த
கொலைகளுக்கு சர்வதேச விசாரணை தேவை எனக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு
தற்போது இடம்பெற்று வரும் காணமல் போதல் கற்பழிப்பு போன்ற விடையங்களிலும்
கவனம் செலுத்தவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment