Lebal

Thursday, February 20, 2014

மகிந்தரின் நண்பர் ரொஹான் குணரட்னவிற்கு கனேடிய தமிழர்கள் வைத்த ஆப்பு !


மகிந்தரின் நெருங்கிய நண்பரும், இலங்கையின் கொள்கை வகுப்புச் செயலாளரும் மற்றும் இலங்கையின் காவல் தெய்வமும் ஆன ரொஹான் குணரட்னவின் தலையில் இடி விழுந்துள்ளது. இவர் ஒரு புத்திசாலியான சிங்களவர் தான் என்பதில் சந்தேகம் இல்லை. வெளிநாடுகளை புலிகளுக்கு எதிராகத் திருப்பியதில் பெரும் பங்கு இவரையே சாரும். பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சிங்கப்பூர் பல்கலைக்கழகப் பேராசியரான இவர் தற்போது கடமையாற்றி வருகிறார். காலை உணவை சிங்கப்பூரிலும், மாலை உணவை மகிந்தரின் மாளிகையிலும் இவர் உண்டு வருகிறார். இதுவே இவர் குறித்த சாராம்சம் ஆகும். இனி என்ன நடந்தது என்று பார்போம்.


இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் ரொஹான் குணரட்ன பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சர்வதேச விவகார பேராசிரியராக கடமையாற்றி வரும் நிலையில், இலங்கை ஊடகமொன்றில் பேராசிரியர் வழங்கிய செவ்வியில் கனேடிய தமிழர் காங்கிரஸிற்கு களங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை பேராசிரியர் குணரட்ன வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடா வாழ் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவுன் இயங்கிவரும் கனேடிய தமிழ் காங்கிரஸ் அமைப்பை இவர், புலிகளின் பினாமி என்று வர்ணித்திருந்தார். 2011ம் ஆண்டு பெப்பரவரி மாதம் இந்த கட்டுரை வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை கண்டித்து கனேடிய தமிழ் காங்கிரஸ் கனடாவில் வழக்கு தொடர்ந்தார்கள்

பேராசிரியர் குணரட்ன, கனேடிய தமிழர் காங்கிரஸிற்கு 53000 டொலர்கள் நட்ட ஈடாக வழங்க வேண்டுமென அந்நாட்டு நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. பேராசிரியர் குணரட்ன, தமது அமைப்பிற்கு களங்கம் ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்டதாக கனேடிய தமிழர் காங்கிரஸ் குற்றம் சுமத்தி வழக்குத் தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த ஒன்டாரியோ உச்ச நீதிமன்ற நீதவான் ஸ்டீபன் ஈ .பெரிஸ்ட்ன பேராரசிரியர் குணரட்னவிற்கு எதிராக தீர்ப்பு அளித்துள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. கனேடிய தமிழர் காங்கிரஸ் என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் கனடாவில் இயங்கி வருவதாக பேராசிரியர் குணரட்ன இலங்கை ஊடகமான லக்பிமநியூஸ் என்ற ஆங்கில ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார்.இந்த விடயம் கனேடிய அரசாங்கத்திற்கு தெரியும் எனவும், அது தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கனேடிய தமிழர் காங்கிரஸிற்கு நட்ட ஈடாக 37000 டொலர்களும், சட்ட செலவீனங்களாக 16000 டொலர்களையும் குணரட்ன செலுத்த வேண்டுமென நீதவான் உத்தரவிட்டுள்ளார்.பேராசிரியர் குணரட்னவின் கருத்து நேரடியாகவும் மறைமுகமாகவும் கனேடிய தமிழர் காங்கிரஸை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்தோடு போலியான தகவல்களை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். இதில் தண்டப் பணம் பெரிதல்ல, நாம் வழக்கில் வென்று உள்ளோம். இது கனேடிய தமிழர்களுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல, அனைத்து தமிழர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும் என கனேடிய தமிழர் காங்கிரசின் தலைவர் டேவிட் பூபாலப்பிள்ளை அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment