

இதேவேளை சாதாரண ஒரு கடத்தல் விவகாரத்திற்கு, இலங்கை இராணுவம் ஏன் ஆளில்லா விமானத்தை அங்கே அனுப்பவேண்டும் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது. குறித்த வனப் பகுதியில் கடத்தல் சம்பவம் நடந்தால், அதனை தடுக்க பொலிசாரை இல்லை இராணுவத்தை அவ்விடத்திற்கு அனுப்பி வைக்கலாமே. அதனை ஏன் செய்யவில்லை ? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. குறித்த இப் பகுதியில் மிக இரகசியமான விடையம் ஒன்று நடைபெற்றுள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. அக்காட்டில் புலிகளின் நடமாட்டம் இருந்திருக்கலாம் எனவும், இதன் காரணமாகவே விலை உயர்ந்த மற்றும் அதி நவீன தொழில் நுட்பத்தைக் கொண்ட ஆளில்லா விமானத்தை இலங்கை இராணுவம் அங்கே அனுப்பி இருக்கலாம் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர், கொழும்பில் உள்ள ஊடகவியலாளர் ஒருவருக்கு தெரிவித்துள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
No comments:
Post a Comment