சீனா
எமது தேசத்திற்கு அண்மையில் உள்ள நாடுகளில் என்ன செய்கிறது என்பதனை நாம்
அவதானித்து தான் வருகிறோம் என்று, இந்திய வெளியுறவு அமைச்சர் சாலமன்
நேற்று(05) தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளில் சீனா பல திட்டங்களை
நிறைவேற்றி வருகிறது. பல நிலையங்களை அமைப்பதும் அன் நாடுகளுக்கு உள்ளக
ரீதியில் உதவுவதும் ஏன் என்று எமக்கு நன்றாகப் புரிகிறது என்று அவர்
தடாலடியாக தெரிவித்துள்ளார். இன் நிலையை நாம் அவதானித்துக்கொண்டு தான்
இருக்கிறோம் என்று சாலமன் மேலும் தெரிவித்துள்ளார்.பங்களாதேஷ், மாலை தீவு, பாக்கிஸ்தான் மியான்மார், இலங்கை, போன்ற நாடுகளின் உள் விடையங்களில் சீனா அதிக அக்கறை காட்டி வருகிறது. அதிலும் குறிப்பாக இலங்கை தொடர்பான விடையத்தில் சீனா அதிக அக்கறை காட்டிவருகிறது. இதனை நாம் மிகவும் கூர்மையாக அவதானித்து வெருகிறோம் என்று இந்திய அமைச்சர் வெளிப்படையாகவே தனது கருத்தை தெரிவித்துள்ளார். திருகோணமலையில் உள்ள புல்மோடை கடல்பகுதியில், சீனா இலங்கை கடற்படைக்கு பல பயிற்சிகளை வழங்கிவருகிறது என்ற செய்தியை அதிர்வு இணையம் நேற்றைய தினம் ஆதாரங்களோடு வெளியிட்டு இருந்தது. தற்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் இக் கருத்தை வெளியிட்டுள்ளார் என்பதும் முக்கியமான விடையம் ஒன்றாகும்.
source:athirvu
No comments:
Post a Comment