Lebal

Thursday, February 13, 2014

பிரித்தானியாவில் நடைபெற்ற "ஈகைப்பேரொளி" முருகதாசனின் வணக்க நிகழ்வு !

இனப்படுகொலை செய்யப்பட்டுவரும் ஈழத்தமிழினத்திற்கான நீதியை சர்வதேசத்திடம் கோரி 12 பெப்ரவரி 2009 அன்று ஜெனீவாவில் ஐ.நா முன்றலில் தனக்குத்தானே தீயிட்டு வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட "ஈகைப்பேரொளி" முருகதாசனின் 5ம் ஆண்டு இன்று லண்டனில் நடைபெற்றது. "ஈகைப்பேரொளி" முருகதாசனின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள இடத்தில் அவரதும், மற்றும் 21 தியாகிகள் நினைவாக அமைக்கப்படுள்ள நினைவுக்கல்லறையில் இன்று (12-02.2014) மதியம் 12:00 மணிக்கு கூடிய அவரது குடும்பத்தினர், உறவினர், மற்றும் நண்பர்கள் அவரது நினைவுக்கல்லிற்கு சுடரேற்றி மலர்மாலை அணிவித்து, மலர் தூவி வணங்கினர்.


முருகதாசனின் உறவினர் மட்டுமன்றி அவரது நினைவுகளை தம் நெஞ்சங்களில் சுமந்தவர்களாய் லண்டனின் பல பாகங்களிலிருந்தும் பலர் அங்கு வந்து விழக்கேற்றி மலவணக்கம் செய்வதை காணமுடிந்தது. ஈழத்தில் தமிழர்கள் கொன்றழிக்கப்பட்டதை கண்டு துடித்தழுத பல இலட்ச தமிழர்கள் மத்தியில் தமிழகத்தில் "தியாகச்சுடர்" முத்துக்குமார் போல் பிரித்தானியாவில் வர்ணகுலசிங்கம் முருகதாசன் துணிவோடு எழுந்து இலங்கையில் தமிழர்களுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக தன்னையே தியாகம் செய்யும் முடிவோடு ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா முன்பாக 12.02.2009 அன்று தன்னையே தீயிற்கு இரையாக்கி தமிழர்களுக்கான நீதியைக் கோரி "ஈகைப்பேரொளியாய்" உலகத்தமிழர்கள் நெஞ்சங்களில் குடி கொண்டவர் முருகதாசன்.

"ஈகைப்பேரொளி" முருகதாசன் நினைவாக பிரித்தானியாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முருகதாசன் அறக்கட்டளை இன்றைய நிகழ்வை ஒழுங்கு செய்திருந்ததோடு, நாட்டிலும் பாதிக்கப்பட்ட, மற்றும் அடிப்படை வசதிகளற்ற மாணவர்களின் கல்விக்கு உதவிவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment