ஜெயலலிதாவின் தீர்மானம் துரதிஸ்டவசமானது – ஜீ.கே.வாசன்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையுடன் தொடர்புடைய ஏழு குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுத்த தீர்மானம் துரதிஸ்டவசமானது என மத்திய அமைச்சர் ஜீ.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் இந்த தீர்மானம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும், இந்தத் தீர்மானமானது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த குற்றவாளிகளுக்கு விடுதலை செய்யப்பட்டால் அது தேசிய பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களை ஏற்படுத்தக் கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநில அரசாங்கம் இதனை விடவும் பொறுப்புணர்ச்சியுடன் தீர்மானங்களை எடுத்திருச்ச வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் மாநில அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு மத்திய அரசாங்கம் அனுமதி வழங்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக மாநில அரசாங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநில நிர்வாகங்களுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.