இலங்கை
அரசின் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் சாட்சியங்கள் பதிவு செய்ய முற்பட்ட போது,
இலங்கை இராணுவத்தினதும் துணை இராணுவக்குழுக்களினதும் கடத்தல் நடவடிக்கைகள்
தொடர்பிலான முறைப்பாடுகளே அதிகளவில் பதிவாகிவருகின்றன என அதிர்வு இணையம்
அறிகிறது. இன்று பதிவான சாட்சியம் ஒன்று:யாழ்.நகரப் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் மனுவேற்பிள்ளை என்ற தந்தை தனது மகன் மனுவேற்பிள்ளை சுதர்சன் (வயது 31) கடத்தப்பட்டமை தொடர்பில் சாட்சியமளித்தார். 2006.09.11 அன்று நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் ஐவர் எமது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து எனது மகனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.
இதனை அடுத்து மறுநாள் அதிகாலையில் குறித்த சம்பவம் தொடர்பில் முறையிடுவதற்காக யாழ்.நகரப் பகுதியில் அமைந்துள்ள ஈபிடிபி அலுவலகத்திற்கு சென்ற போது, இரவு எனது மகனைக் கடத்துவதற்காக வந்திருந்த நபர்கள் எங்கள் வீட்டிற்கு வரும் போது அணிந்திருந்த அதே உடைகளுடன் அங்கு நின்றிருந்தார்கள். இதனால் நாங்கள் அங்கிருந்து திரும்பிவந்துவிட்டோம் எனத் தெரிவித்தார். இதன் போது இடைமறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினர், எதற்காக ஈபிடிபி அலுவலகம் சென்றிருந்தீர்கள் ? எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அதற்கு பதிலளித்த மனுவேற்பிள்ளை, அன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த ஒரே ஒரு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்பதால் அவரிடம் முறையிடச் சென்றோம் என்று தெரிவித்திருக்கின்றார்.
முறையிடச் சென்ற இடத்தில் இப்படியும் நடந்துள்ளது என்றால் பாருங்களேன்.
No comments:
Post a Comment