Lebal

Thursday, March 13, 2014

தினமும் 18 மைல் தூரம் நடந்து தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று வருகிறார்


சீனாவை சேர்ந்த நபர் ஒருவர், தினமும் 18 மைல் தூரம் நடந்து தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று வருகிறார். சீனாவின் தென்மேற்கு பகுதியை சேர்ந்தவர் Yu Xukang, இவரது 12 வயது மகன் Xiao Qiang. இச்சிறுவனால் தானாக நடக்க முடியாது, இருப்பினும் தன் மகனுக்கு சிறப்பான கல்வியை கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், சமுதாயத்தில் சிறந்த மனிதராக உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் தினமும் 18 மைல் தூரம் நடந்து அவனது தந்தை பள்ளிக்கு அழைத்து சென்று வருகிறார்.


  இதற்காக பிரத்யேக கூடை ஒன்றையும் தயாரித்து வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகனுக்கு கல்வியை கொடுக்க அருகில் உள்ள எந்த பள்ளியும் முன்வரவில்லை, 5 மைல் தொலைவில் உள்ள பள்ளி மட்டுமே எனது மகனை ஆதரித்தது. அவனுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். படிப்பில் படுசுட்டியாக விளங்கும் Xiao Qiang, வகுப்பறையில் முதலிடம் வருகிறான் என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment