ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என கனேடிய வெளிவிவகார
அமைச்சின் மனித உரிமைச் செயலாளர் தீபக் ஒபராய் தெரிவித்துள்ளார். பாரிய
மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் குற்றச்
செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாமை போன்ற நிலுவையில் உள்ள
பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கம் காத்திரமான தீர்வுகளை வழங்க வேண்டும்
என்ற கனடாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என அவர்
குறிப்பிட்டுள்ளார்.
2002ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலான சம்பவங்கள் தொடர்பில் முழு அளவில் விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை ஆக்கபூர்வமான உறவுகளை பேண வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். நிலையான சமாதானத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் ஆக்கபூர்மான வகையில் தொடர்புகளைப் பேண வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment