நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக இத்தாலியை சேர்ந்த அகஸ்டா
வெஸ்ட்லேன்ட் நிறுவனமிடம் இருந்து சொகுசு ஹெலிகாப்டரை வாங்க இந்தியா
ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக முன் பணமாக ரூ.2,360 கோடி மதிப்பிலான வங்கி
ஒப்பந்தங்களை அந்நிறுவனத்திற்கு அளித்திருந்தது. இதனிடையே முறைகேடு புகார்
தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு
அறிவித்திருந்தது. இது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை
மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அகஸ்டா வெஸ்ட் லேன்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வங்கி ஒப்பந்தங்களை திருப்பி பெற்றத்தருமாறு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும் இந்த கோரிக்கையை இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகர நீதிமன்றம் மறுத்துள்ளது. இது வங்கி ஒப்பந்தங்களை அகஸ்டா வெஸ்ட்லேன்ட் நிறுவனத்திற்கு சாதகமாக இருந்தாலும் தீர்ப்பபை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment