இலங்கை தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள உத்தேச
தீர்மானம் வலுவானது என்றும், மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச சுயாதீன
விசாரணைகளை வலியுறுத்தி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும்
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்
குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே
பிரித்தானியாவின் நிலைப்பாடு.உள்நாட்டு ரீதியான விசாரணைகள் நம்பகமான
முறையில் நடாத்தப்படாத காரணத்தினால் சர்வதேச சுயாதீன விசாரணைகளை நடாத்த
வேண்டுமென பிரித்தானியா கோரி வருகிறது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உரிய வகையில் செயற்படுத்தப்படவில்லை. ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் நாட்டில் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழியமைக்கும். இலங்கை நிலைமைகளை தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment