Tuesday, March 11, 2014

லண்டனில் நேற்று நடைபெற்ற கொமன்வெல்த் தின நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கவில்லை


News Serviceலண்டனில் நேற்று நடைபெற்ற கொமன்வெல்த் தின நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கவில்லை. இரண்டாம் எலிசபத் மஹாராணியின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்பார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்கவில்லை. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியை பிரதிநிதித்துவம் செய்து லண்டனுக்கு விஜயம் செய்துள்ளார்.கொமன்வெல்த் நாடுகள் அமைப்பின் தலைமைப் பொறுப்பினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாடு நடைபெற்றுவரும் நிலையில் லண்டனுக்கு விஜயம் செய்தால், சிக்கல்களை எதிர்நோக்க நேரிடலாம் என்ற காரணத்தினால் ஜனாதிபதி ஆரம்ப நிகழ்வுகளை தவிர்த்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment