இறுதிக்கட்டப் போர் நடந்த பகுதிகளில் பணியாற்றிய, வைத்திய கலாநிதி துரைராஜா
வரதராஜா நேற்று ஜெனிவாவில், போர்க்கால மீறல்கள் குறித்து,
விளக்களித்துள்ளார். சனல்4 இயக்குனர், கெலும் மக்ரேயுடன் இணைந்து, அவர்
நேற்றைய கூட்டத்தில் பல்வேறு மீறல்கள் குறித்தும், தமது அனுபவங்கள்
குறித்தும் விபரித்தார். “என்னால் வாகரை முதல் மாத்தளன் வரை நடந்தவற்றை
குறிப்பிட முடியும். சுயாதீன வைத்தியத்துறையான எம்மால், மக்கள் பணியை
முழுமையாக செய்ய அரசதரப்பு தடைகளை ஏற்படத்தியதுடன் அது மக்கள் பாரிய
பின்னடைவைச் சந்திக்க காரணமாயிருந்தது. வாகரை பிரதேசத்தை இராணுவம்
ஆக்கிரமித்த போது பலத்த உயிரிழப்புக்களும் மனித உயிர்கள் வதையும் இடம்
பெற்றதை யாவரும் நன்கறிவர்.இதற்கு இன்று பல சாட்சியங்கள் உண்டு.
|
No comments:
Post a Comment