தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை
அமர்வுகளின் மூலம் தீர்வு காண முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்
விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடி
வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த முயற்சி பலனளிக்காது என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு வலுவான ஓர் அரசியல் தீர்வுத்
திட்டமொன்றை முன்வைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டம் காட்டத்
தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.சர்வதே சமூகத்தின் ஒத்துழைப்புடன் தீர்வு
பெற்றுக்கொடுப்பதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புவதாகத்
தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தின் மீது கூடுதல் நம்பிக்கை கொள்ளாது உள்நாட்டுத்
தீர்வுத் திட்ட பொறிமுறைமை ஒன்று குறித்து கவனம் செலுத்துமாறு அவர்
கோரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை, இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான
பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துழைப்பு அவசியமென்றால் வழங்கத் தயார் என அவர்
குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment