Lebal

Saturday, March 29, 2014

இலங்கை மீது விரைவில் சர்வதேச விசாரணை! – ஜெனிவா தகவல்கள் தெரிவிப்பு

.இலங்கை மீது விரைவில் சர்வதேச விசாரணை நடத்தப்படலாம் என ஜெனிவாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்க தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையில் யுத்தத்தின் போது இரு தரப்பினராலும் புரியப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த ஐநா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை குழுவொன்றை அமைப்பார். எனினும் குறித்த விசாரணைக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு வழங்கப்பட மாட்டாதென இலங்கை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
எனவே நவநீதம்பிள்ளை ஒரு தரப்பு விசாரணைகளை நடத்துவார் என இலங்கையின் முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தத் தீர்மானம் பாரிய வலுவுடையது அல்ல. எனினும் எதிர்காலத்தில் ஐநா பாதுகாப்பு சபையில் அது சமர்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதென இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரதிபா மகாநாமஹேவா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு சபையில் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டால் அனுமதி அல்லது நிராகரிப்பு அல்லது பொருளாதார தடை இவற்றில் ஏதேனும் ஒன்று சாத்தியமடைய வாய்ப்புள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment