விடுதலைப்
புலிகள் இயக்கத்தை மீண்டும் தடைசெய்ய உள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம்
ஊடாக அறியப்படுகிறது. 2014ம் ஆண்டுக்கான தீவிரவாத இயக்க பட்டியலை அமெரிக்க
ராஜாங்க திணைக்களம் தற்போது தயாரித்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.
அதன் அடிப்படையில், 60 அமைப்புகள் தடைசெய்யப்பட்ட இயக்கங்களாக அறிவிக்கப்பட
உள்ளது. அதில் விடுதலைப் புலிகளின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 2009ம்
ஆண்டு நடந்த போரில் , விடுதலைப் புலிகள் யுத்தரீதியாக வெல்லப்பட்டார்கள்.
தற்போது அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. பல நாடுகளில் அவர்களுக்கு
விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவேண்டும் என்றும், அப்படி என்றால் தான்
தமிழர்கள் தமக்கான அரசியல் நடவடிக்கையில் முழுமையாக ஈடுபடமுடியும் எனவும்
கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இன் நிலையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவதாகக் கூறிக்கொண்டு, மறுபக்கத்தில் புலிகளையும் தொடர்ந்து தடைசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்காவின் அழுத்தங்களே பிரித்தானியாவிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடும் அமெரிக்காவின் இச்செயல் பல நாடுகளால் உற்றுநோக்கப்பட்டு வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 2014ம் ஆண்டு தடைசெய்யப்படவுள்ள இயங்கங்களின் முழுமையான பட்டியல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment