நட்பு நாடுகளின் ஆதரவு எம்மோடு உள்ளவரை நாட்டைக் கட்டியெழுப்பும் எமது
முன்னேற்ற நடவடிக்கைகளை எவராலும் சீர்குலைக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ தெரிவித்தார். “நாட்டின் அபிவிருத்திப் பயணத்தைத் தடை செய்ய சிலர்
கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்க
முடியாது. எதிர்வரும் 28 ஆம் திகதி ஜெனீவா மனிதஉரிமைப் பேரவையில் சீனா
நேரடியாகவே இலங்கைக்கு ஆதரவு வழங்கும் என்று சீனத் தூதுவர் இங்கு
உரையாற்றும் போது கூறினார். அதற்காக நான் அவருக்கு நன்றி கூற
விரும்புகின்றேன். எமது நட்பு நாடுகளின் ஆதரவு எமக்கு உள்ளவரை எம்மை எவரும்
எதுவும் செய்ய முடியாது. நாட்டைக் கட்டியெழுப்பும் எமது செயற்பாடுகளுக்கு
எமது நேச நாடுகள் தொடர்ந்தும் ஆதரவளிப்பது உறுதி எனவும் ஜனாதிபதி மேலும்
தெரிவித்தார்.
Tuesday, March 18, 2014
சீனா இருக்கும் வரை எம்மை ஒன்றும் செய்ய முடியாது! – மார்தட்டுகிறார் மகிந்த.
நட்பு நாடுகளின் ஆதரவு எம்மோடு உள்ளவரை நாட்டைக் கட்டியெழுப்பும் எமது
முன்னேற்ற நடவடிக்கைகளை எவராலும் சீர்குலைக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ தெரிவித்தார். “நாட்டின் அபிவிருத்திப் பயணத்தைத் தடை செய்ய சிலர்
கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்க
முடியாது. எதிர்வரும் 28 ஆம் திகதி ஜெனீவா மனிதஉரிமைப் பேரவையில் சீனா
நேரடியாகவே இலங்கைக்கு ஆதரவு வழங்கும் என்று சீனத் தூதுவர் இங்கு
உரையாற்றும் போது கூறினார். அதற்காக நான் அவருக்கு நன்றி கூற
விரும்புகின்றேன். எமது நட்பு நாடுகளின் ஆதரவு எமக்கு உள்ளவரை எம்மை எவரும்
எதுவும் செய்ய முடியாது. நாட்டைக் கட்டியெழுப்பும் எமது செயற்பாடுகளுக்கு
எமது நேச நாடுகள் தொடர்ந்தும் ஆதரவளிப்பது உறுதி எனவும் ஜனாதிபதி மேலும்
தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment