Lebal

Friday, March 28, 2014

இலங்கைக்கு எதிரான தீர்மானம் - வாக்கெடுப்பை புறக்கணித்தது தமிழினத்திற்கு செய்யும் மற்றொரு துரோகம்: - டி.ராஜா கருத்து

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி, அந்நாட்டிற்கு எதிராக அமெரிக்கா கொண்டு News Serviceவந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடந்தது. இந்த தீர்மானத்தை ஏற்க மறுத்த இந்தியா, வாக்கெடுப்பை புறக்கணித்தது. இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா எம்.பி. கூறுகையில், “அமெரிக்காவின் தீர்மானம் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று கூறிய இந்தியா, வாக்கெடுப்பை புறக்கணித்தது தமிழினத்திற்கு செய்யும் மற்றொரு துரோகம்” என்று தெரிவித்தார்.

   “இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவங்கள் ஏற்கக்கூடியதல்ல என ஐ.நா மனித உரிமை அமைப்பின் தலைவரான நவி பிள்ளை கூறிய பின்பும் இந்தியா இவ்வாறு நடந்து கொண்டிருப்பது கண்டித்தக்கது. இலங்கையில் நடைபெற்ற அனைத்தும் இந்தியாவிற்கு நன்றாக தெரியும். அவை அனைத்திற்கும் இந்தியா துணை நின்றதால் தான் தற்போது தீர்மானத்தை எதிர்க்கிறது.
காங்கிரஸ் கட்சியின் இந்த வெட்கக் கேடான முடிவு அவர்களின் துரோகத்தையும், வெளிநாட்டு கொள்கையையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதற்காகவே அக்கட்சி நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்” என்று ராஜா கூறியுள்ளார். ஆனால், இந்திய அரசின் புறக்கணிப்பு முடிவை சுப்பிரமணிய சாமி ஆதரித்துள்ளதுடன், இதற்காக பிரதமரை தான் வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment