Lebal

Friday, April 11, 2014

தமிழர் கலை கலாச்சார பண்பாட்டுத்தளத்தில் 'காப்போம் தமிழை' : புகலிட இளையோர்களுக்கான செயற்திட்டம் ! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளையோர் மற்றும் பண்பாட்டு அமைச்சின் முதலாவது செயற்திட்டமான "காப்போம் தமிழை" எனும் முனைப்பு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
பிரித்தானியத் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பணியகத்தில் உத்தியோகபூர்வமாக இச்செயற்திட்டத்தினை இளையோர் மற்றும் பண்பாட்டு விவகாரங்களுக்கான 
அமைச்சர் கார்த்திகா விக்னேஸ்வரன் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.

புலம்பெயர் தமிழ் இளையோர்கள் மத்தியில் தமிழர் கலை - கலாச்சார - பண்பாட்டுத்தளத்தில்  "காப்போம் தமிழை" எனும் செயற்திட்டம் முனைப்பு பெறுகின்றது.
 

ஞாயிற்றுக்கிழமை (06-04-2014) அன்று இடம்பெற்றிருந்த இந்த அறிமுக நிகழ்வில் பல தமிழ் இளையோர்கள் பங்கெடுத்திருந்தனர்.

அமைச்சர் கார்த்திகா விக்னேஸ்வரன் அவர்கள் இச்செயற்திட்டம் தொடர்பில் விளக்கவுரையினை வழங்கியிருந்ததோடு, வருகை தந்திருந்த இளையோர்களோடு கருத்துக்களையும் பரிமாறியிருந்தார்

இதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளான நிமலன் மற்றும் அகிலன் ஆகியோரும் இச்செயற்திட்டத்துக்கு வலுவூட்டும் வகையில் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர்.

நாதம் ஊடகசேவை 

No comments:

Post a Comment