சிறிலங்காவில்
போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து,
நடத்தப்படும் அனைத்துலக விசாரணைகளின் மீது தமக்கு நம்பிக்கையில்லை என்று
சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. கண்டியில், நேற்று பௌத்த பீடாதிபதிகளை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மகிந்த சமரசிங்க,
அனைத்துலக விசாரணை நம்பகத்தன்மை கொண்டதாகவோ, சுதந்திரமானதாகவோ இருக்காது என்று சிறிலங்கா அரசாங்கம் உணர்கிறது.
ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது.
அதற்குப் பதிலாக போர் தொடர்பான விடயங்களைக் கையாண்டு கவனிப்பதற்கு உள்நாட்டுப் பொறிமுறையை முன்னெடுக்கும்.
நல்லிணக்கம் பற்றிய விடயத்தை உள்நாட்டு நடைமுறைகளின் மூலம் கவனிப்பதே பொருத்தமானது என்பதுதான் அரசின் கருத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.source:pp
No comments:
Post a Comment